#புளிகாச்சல் : புளிகாச்சல் என்றதுமே சிலருக்கு நாவில் நீர் ஊரும். இதனை செய்து வைத்துக்கொண்டால் #புளியோதரை செய்வதற்கும் #இடியாப்பம் செய்யும் போது அதனுடன் சேர்த்து பிசைவதற்கும் ஏதுவாக இருக்கும்.
#மதியஉணவு எடுத்து செல்பவர்களுக்கு மிக மிக அவசியமான ஒன்றாகும்.
புளிகாச்சலை சாதத்துடன் கலந்து உருளை கிழங்கு கார கறியுடன் அல்லது வத்தல் [அ ]அப்பளத்துடன் சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.
இனி புளிகாச்சல் செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் :
3 பெரிய நெல்லி அளவு புளி
8 சிகப்பு மிளகாய், துண்டுகளாக்கவும்
சிறிய துண்டு பெருங்காயம்
1 1/2 Tsp கடுகு
1/2 Tsp வெந்தயம்
1 Tsp உளுத்தம் பருப்பு
3 Tsp கடலை பருப்பு
1/4 கப் நில கடலை
15 - 20 கறுவேப்பிலை
4 Tbsp நல்லெண்ணெய்
தேவையான பொடிகள் :
1 Tsp மிளகாய் பொடி
1/2 Tsp மஞ்சத்தூள்
2 Tsp மல்லித்தூள்
1/2 Tsp சீரகத்தூள்
1/4 Tsp பெருங்காய தூள்
செய்முறை :
புளியை வெந்நீரில் அரை மணி நேரம் முன்னதாகவே ஊற வைக்கவும்.
ஊறிய புளியை சிறிது தண்ணீர் விட்டு பிழிந்து கெட்டியான கரைசலை எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சிகப்பு மிளகாய் துண்டுகளில் பாதியை சேர்க்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கடலையை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் கடைசியாக கருவேப்பிலையை சேர்த்து வறுத்து ஒரு கிண்ணத்தில் தனியே எடுத்து வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை சேர்த்து சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
வெடித்ததும் வெந்தயம் மற்றும் மீதமுள்ள மிளகாய் துண்டுகள், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
அடுத்து மிளகாய் தூளை சேர்த்து உடனேயே புளி கரைசலை சேர்க்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொடிகளையும் சேர்க்கவும்.
சிறிய தீயில் கொதிக்கவிடவும்.
சில நிமிடங்கள் கழித்து மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும்.
இப்போது வறுத்து தனியே வைத்துள்ள பருப்பு, உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கலக்கி விடவும்.
மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
எண்ணெய் நன்கு மேலெழும்பி மேலே வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அல்லது கண்ணாடி பாட்டிலிலும் எடுத்து வைக்கலாம்.
நன்கு ஆறிய பிறகு மூடி வைக்கவும்.
நன்கு எண்ணெய் விட்டு கிளறி இருப்பதால் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு வெளியிலேயே வைத்திருக்கலாம்.
குளிர் சாதன பெட்டியிலும் பத்திர படுத்தலாம்.
சுவையான கார சாரமான புளி காச்சல் தயார்.
சாதத்தில் கலந்து புளியோதரை தயாரிக்கலாம்.
இடியாப்பம் செய்தால் அதனுடனும் கலந்து சுவைக்கலாம்.

குறிப்பு :
புளிகாச்சல் பழைய புளியில் செய்யும் போதுதான் நன்றாக இருக்கும்.
புளியின் சுவைக்கேற்றவாறு மிளகாய் தூள் மற்று உப்பை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment