Search This Blog

Tuesday, April 15, 2014

Maangai Chutney - Mango Chutney

#மாங்காய்சட்னி : கோடை காலத்தில்தான் மாங்காய் கிடைக்கும். அதனால் மாங்காயை உபயோகபடுத்தி என்னென்ன செய்ய முடியுமோ, எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டியதுதான். அந்த வரிசையில் இன்று செய்த மாங்காய் சட்னியின் செய்முறை இதோ

மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள் :
1/4 கப்                                   மாங்காய் செதுக்கியது [ புளிப்பில்லாதது ]
1/4 கப்                                   தேங்காய் துருவல்
15                                           புதினா இலைகள்
2 அ 3                                    சிகப்பு மிளகாய்
1 Tsp                                      சீரகம்
3/4 Tsp                                   உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                   கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
6                                             கறுவேப்பிலை
1/2 Tsp                                   எண்ணெய்

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் மிக்சியில் முதலில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின் கருவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
சட்னியின் மேல் கொட்டவும்.

மாங்காய் சட்னி

இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற சட்னியாகும்.
வெள்ளை சாதத்திலும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.






வேறு சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள்

நெல்லிக்காய் சட்னி 1
நெல்லிக்காய்
சட்னி 1
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
பருப்பு துவையல்
பருப்பு
துவையல்
மாங்காய் சட்னி 1
மாங்காய்
சட்னி 1



No comments:

Post a Comment