Search This Blog

Sunday, April 20, 2014

Amaranth Kozhukattai

அமராந்தம் கொழுக்கட்டை : அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.
அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 
Amaranth - அமராந்தம் 

To know more about the plant
Amaranth Plant

Several studies have shown that like oats, amaranth seed or oil may be of benefit for those with hypertension and cardiovascular disease; regular consumption reduces blood pressure and cholesterol levels, while improving antioxidant status and some immune parameters

Source : http://en.wikipedia.org/wiki/Amaranth

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது.

இதனை கொண்டு பிடி கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.



தேவையான பொருட்கள் :
1/4 cup                                             அமராந்தம்
1/4 cup                                             அரிசி மாவு
1/4 cup                                             ஓட்ஸ்
1/4 cup                                             தேங்காய் துருவல்
1/2 Tsp                                             உப்பு

தாளிக்க :
1 Tsp                                                கடுகு
1 Tsp                                                உளுத்தம் பருப்பு
2 Tsp                                                கடலை பருப்பு
3 Tsp                                                நில கடலை
1 or 2                                               சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
10 or 12                                            கறுவேப்பிலை
1/4 Tsp                                             பெருங்காய தூள்
2 Tsp                                                எண்ணெய்

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா வற்றையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மாவை பிசைந்து வைக்கவும்.
மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
தளரவும் இருக்கக் கூடாது.
அரை மணி நேரம் ஊற விடவும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முதலில் கடுகு தாளித்து, உடைத் மிளகாய் துண்டுகள் மற்றும் பேருங்க தூள் சேர்த்த பின்னர் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின்னர் கருவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்தவற்றை மாவுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.


அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் எண்ணெய் தடவிவைக்கவும்.

இப்போது மாவை கையில் பிடித்து கொழுகட்டையாக்கி இட்லி தட்டின் மேல் அடுக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி பானையில் வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆவியில் வேக விடவும்.


வெந்ததும் எடுத்து சுவைக்க வேண்டியதுதான்.

பரிமாறும் தட்டில் வைத்து சட்னியுடன் பரிமாறவும்.


கொழுகட்டையே காரமும் சுவையும் கூடியதாக இருப்பதால் தொட்டுக் கொள்ள ஏதும் இன்றி கூட சுவைக்கலாம்.




No comments:

Post a Comment