Search This Blog

Tuesday, April 8, 2014

Varagarisi Pudhina Briyani

#வரகரிசிபிரியாணி : #வரகரிசி ஆங்கிலத்தில் Kodo Millet என அழைக்கப்படுகிறது. இது சிறு தானிய வகைகளுள் ஒன்றாகும். சிறு தானியங்கள் மழை அதிகமாக பெய்யாத இடங்களிலும் மண் வளம் நன்றாக இல்லாத இடங்களிலும் கூட நன்கு விளையும். அரிசி மற்றும் கோதுமையை விட இச்சிறுதானியங்களில் விட்டமின் சத்தும் உலோக சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. சிறு தானியங்களை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
இப்போது பிரியாணி செய்யும் முறையை காண்போம்.

வரகரிசி பிரியாணி

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     வரகரிசி
1                                             வெங்காயம், நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்
1                                              தக்காளி, பொடியாக நறுக்கவும்
1                                             காரட், துண்டுகளாக்கிக் கொள்ளவும்
1/4 கப்                                    காலி ப்ளோவேர் துண்டுகள்
1/4 கப்                                    குடை மிளகாய் துண்டுகள்
6                                             பூண்டு பற்கள்
1 அ 2                                      பச்சை மிளகாய்
1 Tsp                                       இஞ்சி பூண்டு விழுது
1 கப்                                        புதினா
1/4 கப்                                     கொத்தமல்லி தழை
1/4 Tsp                                     மிளகாய் தூள்
1/4 Tsp                                     சீரகத்தூள்
3/4 Tsp                                     உப்பு
3 Tsp                                        எண்ணெய்


தேவையான வாசனை பொருட்கள் :
1/2 Tsp                                     சீரகம்
1/2 Tsp                                     பெருஞ்சீரகம்
1 அங்குல                              இலவங்க பட்டை
1                                               அன்னாசி மொக்கு
2                                              பிரிஞ்சி இலைகள்
4                                              கிராம்பு
2                                              ஏலக்காய்

செய்முறை :
வரகரிசியை கழுவி ஊறவைக்கவும்.
புதினா மற்றும் கொத்தமல்லியையும் தனித்தனியே கழுவி தண்ணீரை வடிய விடவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடேற்றவும்.
சூடானதும் முதலில் சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தை வெடிக்க விட்டு பின்னர் மற்ற வாசனை சாமான்களை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி சேர்க்கவும்.
கொத்தமல்லியையும் மிளகாய் தூளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிராட்டிய பின்னர் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
இந்த தருணத்தில் எடுத்துக்கொண்ட எல்லா காய்கறிகளையும் சீர்கதூளோடு சேர்த்து ஒரு கிளறு கிளறி வரகரிசியிளிருந்து தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.


அடி பிடிக்காமல் கிளறவும். வரகரிசி நல்ல வெள்ளை நிறமாக மாறியவுடன் புதினா மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் கிளறிவிடவும்.


பின்பு  1 கப் தண்ணீர் அல்லது 1 கப் பால் சேர்க்கவும்.
நன்கு கலக்கி விடவும்.


குக்கரை மூடி வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை அதிக தீயில் வைத்து பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும். மணமும் சுவையும் கூடிய  அருமையான வரகரிசி புதினா பிரியாணி தயார்.
சாரணியால் நசுக்காமல் கிளறி விடவும்.



தயிரில் வெங்காயம், வாழைபூ, காரட், தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை,பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து உப்பு போட்டு கலக்கி பச்சடி தயார் செய்யவும்.



பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து தயாரித்த தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.

வரகரிசி பிரியாணி

மேலும் சில சமையல் குறிப்புகள் :
வரகரிசி புளியோதரை வரகரிசி தக்காளி சாதம் குதிரைவாலி வாழைப்பூ புலாவ்

No comments:

Post a Comment