Search This Blog

Wednesday, April 9, 2014

Vazhaipoo Masaal Vadai

#வாழைப்பூமசால்வடை : இதனை #வாழைப்பூபருப்புவடை என்றும் கூறலாம்.
#வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருப்பதால் அதனை மறைப்பதற்காக சில உத்திகளை உணவு தயாரிக்கும் போது கடை பிடிக்க வேண்டி உள்ளது. இங்கு பருப்புடன் சேர்த்து  வடை செய்யும் போது வாழைப்பூவின் சுவை சிறிது மட்டுப்படும். அதனால் அனைவரும் ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்!!
இனி எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.



தேவையான பொருட்கள் :
அரைக்க வேண்டியவை :
1/2 கப்                                     கடலை பருப்பு
1 Tbsp                                      உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                     உப்பு
1 அ 2                                       சி.மிளகாய் [அ ] ப.மிளகாய்
1/2 Tsp                                     சீரகம்
1/2 Tsp                                     பெருஞ்சீரகம்
சிறு துண்டு                          இஞ்சி



மாவில் சேர்கவேண்டியவை :
1 சிறிய அளவு                     வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
20 - 25                                     வழைப்பூ ஆர்குகக்கள், பொடியாக நறுக்கவும்
1/4 கப்                                      கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
10                                            கருவேப்பிலை

செய்முறை :
பருப்பு இரண்டையும் கழுவி ஒரு மணி  நேரம் ஊற வைக்கவும்.
 எண்ணெய் சட்டியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சிறிய தீயில் சூடேற்றவும்.
ஊறிய பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைத்தெடுக்கவும்.
மாவில் சேர்க்கவேண்டிய பொருட்களை சேர்த்து பிசையவும். உப்பு சரி பார்க்கவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்னர் கைகளால் தட்டி வடை வடிவமாக்கவும்.
எண்ணெயில் மெதுவாக போடவும்.
ஒரு முறைக்கு 4 அ 5 வடை தட்டி பொரிக்கவும்.
இரண்டு பக்கமும் திருப்பி வேக விட வேண்டும்.
பொன்னிறமாக பொரியும் வரை சிறிய தீயில் வேக விடவும்.
எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் மேல் வைத்து அதிகப் படியான எண்ணெயை நீக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக பகோடா போலவும் பொரித்தெடுக்கலாம்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான டீ அல்லது ஆவி பறக்கும் காபியுடன் மொறு மொறு வடையை சுவைத்தால் ஆஹா!.... ருசியே அலாதிதான்!!...


குறிப்பு :
எண்ணெயில் பொறிப்பதை தவிர்க்க விரும்பினால் உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து வாழைப்பூ பருப்பு உருண்டை செய்து சுவைக்கலாம்.




சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வாழைப்பூ குழம்பு வாழைப்பூ மிளகு குழம்பு வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்






No comments:

Post a Comment