Search This Blog

Saturday, May 31, 2014

Dosai

#தோசை : இந்த தோசையை மாவு தோசை என்று அழைக்கப்படுவது வழக்கம். சிற்றுண்டி சாலைகளில் மொறு மொறு தோசையை பிரபல படுத்திய பிறகு அனைவருக்கும் தோசை என்றதும் நிறைய நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுடப்படும் முறுவல் தோசைதான் கண் முன்னே நிற்கிறது!!

மொறு மொறு தோசை

மெத்து மெத்தென்று தடிமனாக சுடப் படும் தோசையும் மிக மிக ருசியுடன் இருக்கும். இந்த தோசையை சுட நிறைய எண்ணெய் தேவையில்லை.

மாவு தோசை

தோசைக்கென்று தனியாக மாவு அரைக்க தேவையில்லை. இட்லி மாவு கொண்டே அருமையான தோசை தயாரிக்கலாம். மேல் மாவை இட்லி தயாரிக்கவும் கீழே உள்ள மாவை தோசைக்கும் பயன் படுத்தலாம்.
காலையில் இட்லி தயாரித்தால் மீதமுள்ள மாவை கொண்டு இரவில் தோசை தயாரிக்கலாம்.
இனி ஊற்றும் முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
இட்லி மாவு
எண்ணெய், தோசை சுட தேவையான அளவு
சிறு மெல்லிய சுத்தமான துணி

செய்முறை :
மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சிறிது நீர்க்க கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
சரியான சூடேறியதும் எடுத்துக்கொண்டுள்ள துணியை பந்து போல சுருட்டி சிறிது எண்ணெயில் நனைத்து தோசை கல்லின் மேல் தடவவும்.
பின்னர் மாவை தோசை கல்லின் நடுவே வைத்து சீராக தடவி வட்டமான தோசையாக்கவும்.
ஒன்றரை முதல் 3 mm தடிமனாக இருக்க வேண்டும்.


தோசையின் மேலே சில துளிகள் எண்ணெய் தெளிக்கவும்.
ஓரங்கள் இலேசாக சிவந்ததும் திருப்பி போடவும்.


இரண்டு பக்கமும் நன்கு சிவந்த பின்னர் தட்டில் எடுத்து வைக்கவும்.

மாவு தோசை

இதே போல ஒவ்வொரு தோசையும் சுட்டு அடுக்கவும்.

நன்கு சிவப்பதற்கு முன்பேயும் எடுக்கலாம்.
அத்தகைய தோசை இன்னும் சுவையாக இருக்கும்.

மாவு தோசை

மாவு நன்கு புளித்திருந்தால் மட்டுமே அழகான ஓட்டைகளுடனும் மெத்தென்றும் தோசை அமையும்.
சூடாக சாப்பிட்டால் மிக அருமையான ருசியுடன் இருக்கும்.
தேங்காய் சட்னி அல்லது சாம்பார் அல்லது கொத்தமல்லி சட்னி உடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

மாவு தோசை


இதே மாவில் மொறு மொறு தோசை சுட வேண்டும் என்றால்
கல்லில் துணியினால் எண்ணெய் தடவிய பிறகு நடுவில் மாவை வைத்து தட்டையான கரண்டியினால் அல்லது தட்டையான சிறிய கிண்ணத்தினால் மெல்லியதாக தேய்க்கவும்.


பின்னர் தோசையின் மேல் தாராளமாக எண்ணெய் விட்டு சிவந்த பின் திருப்பி போடவும்.


இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் தட்டில் எடுத்து வைக்கவும்.
மேலே நெய் அல்லது வெண்ணெய் தடவி சுவைக்கலாம்.
சாம்பார், சட்னி அல்லது ஏதேனும் கொத்தமல்லி சட்னி போன்ற கார சட்னியுடன் சுவைக்கவும்.

மொறு மொறு தோசை






மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :

தோசை மாவு
தோசை மாவு
மசால் தோசை
மசால் தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
பொடி தோசை
பொடி தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி





Friday, May 30, 2014

Avakkai Urugai

#ஆவக்காய்ஊறுகாய் : கோடை வெய்யிலுக்கு பயந்தாலும் நாவில் நீர் சுரக்க வைக்கும் மாங்காயை நினைக்கும் போது வெய்யில் காலமும் சுகமானதாகவே தோன்றும்.  மாங்காயை வெட்டி மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் உப்புடன் சாப்பிட்டால்...... ம் ... அதன் ருசியே தனிதான் !!

சிறு சிறு வடுமாங்காய் விற்க ஆரம்பித்தால் கோடையின் தொடக்கம் என அர்த்தம். அம்மாக்களும் பாட்டிகளும் ஊறுகாய் போட ஆயத்தம் ஆகி விடுவார்கள். முதலில் வடுமாங்காய், அடுத்து மாங்காய் தொக்கு, பிறகு ஆவக்காய் ஊறுகாய் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஆவக்காய் ஊறுகாய் ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய ஊறுகாய் ஆகும்.மாங்காய் துண்டுகளை கடுகு, வெந்தயம், மிளகாய் தூள் மற்றும் உப்பு கலந்த எண்ணெயில் ஊற விடுவதே ஆவக்காய் ஊறுகாய் ஆகும்.

எங்களுக்கு எண்ணையில் ஊறிய மாங்காயை சாப்பிட பிடிக்கும். ஆனால் எண்ணெய் கலவை வீணாகி போகும்.
அதனால் எனது தாயார் இதே  பொருட்களை கொண்டு ஆவக்காய் செய்வார்கள். ஆனால் செய்முறையில் சிறு மாற்றம் உண்டு.
மிகவும் புளிப்பில்லாத கொட்டையுடன் கூடிய மாங்காய் கொண்டு செய்யப்படுகிறது. நான் பெரும்பாலும் கிளி மூக்கு மாங்காய் என அழைக்கப்படும் பெங்களூராவை உபயோகப் படுத்தி செய்வது வழக்கம்.
எப்படி என்று இங்கு காணலாம்.

ஆவக்காய் ஊறுகாய் 

தேவையான பொருட்கள் :


1 kg [சுமார் 5 ]                           மாங்காய்
1/2 கப்                                         சிகப்பு மிளகாய் தூள்
1/2 கப்                                         நல்லெண்ணெய்
1/2 கப்                                         உப்பு
1/4 கப்                                         கடுகு
1/8 கப்                                         வெந்தயம்
2 Tsp                                            மஞ்சத்தூள்

செய்முறை :
நாள் 1 :
காயை நன்கு கழுவி வைக்கவும்.
மிகவும் கஷ்டமான வேலை எது என்றால் உள்ளே உள்ள கொட்டை ஓட்டோடு வெட்டுவதுதான்.
முதலில் நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்.
நடுவில் உள்ள பருப்பை நீக்கி விடவும்.
பிறகு ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி  அகலமான தட்டில் பரப்பவும்.
வெய்யிலில் 4 முதல் 5 மணி நேரம் காய வைக்கவும்.
சிறிது சுருங்கினாற்போல காய்ந்தால் போதும்.

வீட்டின் உள்ளே அதே தட்டிலேயே வைத்து ஒரு மெல்லிதான துணி கொண்டு மூடி வைக்கவும்.

மாலையில் முதலில் எண்ணெயை அடுப்பில் இலேசாக புகை வரும் வரை சூடு பண்ணி பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
நன்றாக ஆற விடவும்.

கடுகை சிறிது நற நறவென பொடித்துக் கொள்ளவும்.
அதேபோல வெந்தயத்தையும் பொடித்து தனியே வைக்கவும்.
உணவு பத்திரப்படுத்த தகுதி உள்ள மூடியுடன் கூடிய சுத்தமான பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளவும். ஈரப்பசை சிறிதும் இருக்கக்கூடாது.

பொடித்த பொருட்கள், உப்பு, மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து ஒன்றாக கலக்கி வைக்கவும்.
பிளாஸ்டிக் டப்பாவில் கலந்த பொடிகள் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கலக்க உபயோகிக்கும் கரண்டி சுத்தமானதாகவும் ஈரம் இல்லாததாகவும் இருப்பது மிக மிக அவசியம்.
சிறிது சிறிதாக மாங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு நீண்ட கரண்டியால் கலவையுடன் கலக்கி விடவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலக்கிய பின்னர் மூடி வைத்து விடவும்.

நாள் 2 :


மறுநாள் பார்த்தால் சிறிது தளர இருப்பதை காணலாம். மாங்காயில் உள்ள தண்ணீர் உப்புடன் சேர்ந்து சிறிது இளக்கம் கொடுத்திருக்கும். நன்றாக குலுக்கி வைக்கவும். சரியாக குலுக்கினாலும் மேலே உள்ள மாங்காய் கீழே போகவில்லை என்றால் டப்பாவை திறந்து ஈரமில்லாத கரண்டியினால் கலக்கி விடலாம். மறுபடியும் மூடி வைத்து விடவும்.

நாள் 3 :
இன்றும் குலுக்கி வைக்கவும்.
நேற்றை விட இன்று இன்னும் சிறிது அதிகமாக நீர்த்து போய் கீழே எண்ணெய் கலவையாக இருப்பதை காணலாம்.


நாள் 4 :
ஒரு சுத்தமான ஈரமே இல்லாத ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும்.
மாங்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கரண்டியால் எடுத்து தட்டின் மேல் பரப்பவும்.

கீழே தங்கியுள்ள எண்ணெயை முடிந்தவரை தட்டில் கொட்டாமல் பார்த்துக் கொள்ளவும். அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் வடித்து வேறு சமையலில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

நல்ல வெய்யிலில் நாள் முழுவதும் காய விடவும்.
இடையே கரண்டியால் பிரட்டி விடவும்.

நாள் 5 :


இன்றும் வெய்யிலில் எடுத்து வைத்து காய வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைக்கவும்.

பொதுவாக பகல் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் க்கு மேலே இருப்பின் இரண்டு நாட்கள் காய வைத்தால் போதும்.
அதற்கு குறைவாக இருப்பின் 3 அல்லது நான்கு நாட்கள் காய வைக்கவும்.
மிகவும் சுக்காக காய வைக்கக்கூடாது.
சிறிது ஈரப் பசை இருக்க வேண்டும்.
சுக்காக காய்ந்து விட்டால் கடிப்பதோ அல்லது பிய்த்து சாப்பிடுவதோ கடினமாக இருக்கும்.

காய்ந்த ஆவக்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.


உடனே சாப்பிட நன்றாக இருக்காது.
20 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஊறிய பிறகே சாப்பிட பயன் படுத்தலாம்.

சுத்தமாக தண்ணீர் மற்றும் கை படாமல் செய்த ஆவக்காய் ஊறுகாய் இரண்டு வருடங்களுக்கு கூட ... அதற்கு மேலும் கூட உபயோகிக்கலாம்.
அருமையாக இருக்கும். வெந்தயமும் கடுகும் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது.
தயிர் சாதத்துடன் சாப்பிட ஏதுவான அருமையான ஊறுகாய் ஆகும்.
பருப்பு சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துடனும் நன்றாக இருக்கும்.
சப்பாத்தி மற்றும் பூரியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும்.





சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
உப்பு எலுமிச்சங்காய்
உப்பு எலுமிச்சங்காய்



Monday, May 26, 2014

Green Tea with Tulasi

#கிரீன்டீ #துளசி யுடன் : சாலை ஓரங்களிலும் பராமரிக்காத வீட்டு தோட்டங்களிலும் துளசி செடி தானாகவே வளர்ந்திருக்கும். பல வீடுகளில் துளசி மாடத்தை  முற்றத்தில் வைத்து துளசிக்கு பூஜை செய்வோர் உண்டு. பெருமாள் கோயில்களில் துளசி தண்ணீரை பிரசாதமாக அளிப்பது வழக்கம்.
துளசியில் நோய் எதிர்க்கும் சக்தி அபாரமாக உள்ளது. அதனாலேயே இந்த மூலிகை மிக பழங்காலம் தொட்டு மக்களால் உபயோகப் படுத்தப் படுகிறது.
நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் துளசிக்கு ஒரு தனி இடம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
இப்போது அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியை கிரீன் டீயுடன் சேர்த்து எவ்வாறு பானம் தயாரிக்கலாம் என காண்போம்.

கிரீன்டீ துளசியுடன்


தேவையான பொருட்கள் :
175 ml                                       தண்ணீர்
1 Tsp                                         கிரீன்டீ
12                                              புதினா இலைகள் கழுவியது
1/4 அங்குல                          இஞ்சி துண்டு
1 Tsp                                         எலுமிச்சை சாறு


செய்முறை :
அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
முதலில் கிரீன்டீயை சேர்க்கவும்.
பின்னர் துளசி இலைகளை கைகளால் பிய்த்து போடவும்.
இஞ்சியை நசுக்கி சேர்க்கவும்.

கிரீன்டீ துளசியுடன்

2 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
ஒரு டீ கோப்பையில் எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு நிமிடகளுக்கு பின்னர் டீயை கோப்பையினுள் வடிகட்டவும்.


தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
துளசி மணத்துடன் கூடிய புத்துணர்ச்சி பானம் தயார்.

கிரீன்டீ துளசியுடன்

தினமும் அருந்தினால் நோய் நொடி அண்டாமல் இருக்கும்.

இனிப்பு தேவையெனில் வெல்லம் அல்லது தேன் சேர்த்து பருகலாம்.






மேலும் சில டீ வகைகள் :
தேநீர் புதினாவுடன் கிரீன்டீ



Green Tea with Mint

#கிரீன்டீ புதினா வுடன் : புதினா காரமும் மிகவும் மணமும் நிறைந்த ஒரு மூலிகை கீரையாகும். வயிற்று போக்குக்கு நல்ல மருந்தாகவும் வாயு தொல்லையை நீக்கவும் உதவி செய்கிறது.
வயிற்று புழுக்களை நீக்க வல்லது.
பொடுகை நீக்க புதின சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து தலையில் தடவி சீயக்காய் பொடி தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
காய வைத்த இலையுடன் உப்பு சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவும். இந்த பொடியை பல் தேய்க்க உபயோகித்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வாய் துர் நாற்றத்தையும் நீக்க வல்லது.
இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட புதினாவை தினமும் சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.
இங்கு கிரீன் டீயுடன் புதினாவை சேர்த்து எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
175 ml                                       தண்ணீர்
1 Tsp                                         கிரீன்டீ
12                                              புதினா இலைகள் கழுவியது
1 Tsp                                         இஞ்சி ஊறவைத்த தண்ணீர்*
1 Tsp                                         எலுமிச்சை சாறு

* 1/2 அங்குல இஞ்சியை கழுவி விட்டு நசுக்கி 1/4 கப் தண்ணீரில் ஊறவைக்கவும். மேலாக உள்ள தண்ணீரை எடுத்து உபயோகிக்கவும்.

செய்முறை :
அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
முதலில் கிரீன்டீயை சேர்க்கவும்.
புதினா இலைகளை கைகளால் கசக்கி சேர்க்கவும்.
மூடியினால் மூடி இரண்டு நிமிடங்கள் வைத்திருக்கவும்.

ஒரு டீ கோப்பையில் இஞ்சி சாறையும் எலுமிச்சை சாறையும் எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் டீயை கோப்பையினுள் வடிகட்டவும்.
தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
புதினா மணம் தூக்கலான சுவையான கிரீன் டீ தயார்.
காலை வேளையில் பருகினால் புத்துணர்ச்சி தரும். சோர்வு முழுவதுமாக நீங்கி விடும்.

இனிப்பு தேவையானால் தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.





மேலும் சில தேநீர் வகைகள் :
தேநீர் துளசியுடன் கிரீன்டீ