Search This Blog

Wednesday, May 25, 2016

Idli Varieties

#இட்லிவகைகள் : #இட்லி ஒரு முழுமையான உணவாகும். பெரியவர் முதல் சிறு குழந்தைகள் வரை எல்லோருக்கும் ஏற்ற சத்தான உணவாகும். எளிதில் சீரணிக்கக் கூடிய உணவாகையால் நோயாளிகளுக்கும் ஏற்ற அருமையான உணவு.
இட்லியை உடனடியாக தயாரிக்க இயலாது. முதல் நாளே அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியே ஊறவைத்து ஒவ்வொன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக எடுத்து வைக்க வென்றும். தேவையான உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் அல்லது எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு புளித்த பின்னர் நன்கு எழும்பி வரும். நன்கு புளிக்க வைத்த மாவை இட்லி பானை கொண்டு ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இட்லி மிருதுவாக இருக்க
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பின் விகிதம் மிகவும் முக்கியமானதாகும்.
சில குறிப்பிட்ட அரிசி வகையே இட்லி செய்ய ஏதுவானது.
அரிசியை சிறிது கொரகொரவென கெட்டியாக அரைக்க வேண்டும்.
உளுந்தை அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு பொங்க பொங்க அரைக்க வேண்டும்.
அரைத்த அரிசி மற்றும் உளுந்து மாவை உப்பு சேர்த்து நன்றாக கலந்து புளிக்க விட வேண்டும்.
மாவு நன்றாக பொங்கி, அதாவது அரைத்த அளவை விட இரு மடங்கு பொங்கும் வரை புளித்தால்தான் இட்லி மென்மையாக இருக்கும்.

இங்கு பல வகையான இட்லி சமையல் குறிப்புகளின் இணைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது.


இட்லி மாவு
இட்லி மாவு
இட்லி சுடும் முறை
இட்லி செய்யும் முறை
பொடி இட்லி
பொடி இட்லி
இட்லி உப்புமா
இட்லி உப்புமா
சோள இட்லி
சோள இட்லி
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கோதுமை ரவா இட்லி
கோதுமை ரவா இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
ரவா பாப்பரை இட்லி
ரவா பாப்பரை இட்லி





தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க


இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Saturday, May 21, 2016

Venthayakeerai-koottu

#வெந்தயக்கீரைகூட்டு : #வெந்தயக்கீரை மற்ற #கீரை களை போல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இரும்பு சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உடையது. சிறிது கசப்பு தன்மை கொண்டது. அதனால் பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து கூட்டு செய்யும் போது கசப்பு சிறிது மட்டுப் படும். பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்து தனியே வைக்கவும். கீரையை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு, சாம்பார் பொடி , மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வேக வைத்த கீரையுடன் பருப்பு மற்றும் தேங்காய் அரைத்து விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் கூட்டு தயார்.

வெந்தயக்கீரை கூட்டு

தேவையான பொருட்கள் :
1 கப்வெந்தயகீரை நறுக்கியது
1/3 கப்பயத்தம் பருப்பு
3/4 Tspசாம்பார் பொடி 
1 pinchமஞ்சத்தூள்
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
அரைக்க :
4 Tspதேங்காய் துறுவல்
4 or 5மிளகு
1/4 Tspஅரிசி மாவு
To Temper :
1/2 Tspவெங்காய வடவம்
1/2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
பருப்பு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்த பின்னர் கத்தியால் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அல்லது வாணலியை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயின் மீது சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும்.

ஒரு கரண்டியால் கலக்கிய பின்னர் அரிந்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.
கீரையின் மேல் வேக வைத்த பருப்பையும் சேர்த்து ஒரு மூடி போட்டு  2 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்து விடவும்.
உப்பு சரிபார்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி  வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மீது கொட்டவும்.
கூட்டின் சுவையும் வெங்காய வடவத்தின் மணமும் சாப்பிடத் தூண்டும்.
சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாம்பாரில் உள்ள காயுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெந்தயக்கீரை கூட்டு




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
சிறுகீரை கூட்டு வாழைப்பூ முருங்கைகீரை கூட்டு பசலை கீரை பூரி
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன் சிகப்பு கீரை சப்பாத்தி






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Friday, May 13, 2016

Pirandai-Thuvaiyal

#பிரண்டைதுவையல் :  #பிரண்டை  யை பொதுவாக தோட்டத்து வேலிகளில் படர்ந்திருப்பதை காணலாம். இதை ஆங்கிலத்தில்  Adament creeper / Devils' back bone / Veldt Grape என அறியப்படுகிறது. பிரண்டை கணுக்களை கொண்டதாகவும், வேலிகளில் படருவதற்காக பற்றிக்கொள்ள ஏதுவாக நரம்புகளை உடையதாகவும் இருக்கிறது.
அப்பளம் செய்வதற்கு பிரண்டை பயன் படுத்தப்படுகிறது. இதை தவிர துவையல் அரைக்கவும் செய்யலாம். இளையதாக உள்ள நுனி பகுதி துவையல் அரைக்க ஏதுவாக இருக்கும். நன்கு கழுவிய பிறகு கணு பகுதியை உடைத்து நான்கு பகுதியிலும் நரம்பை நீக்க வேண்டும்.
இனி துவையல் செய்யும் முறையை காண்போம்.

Pirandai thuvaiyal


தேவையான பொருட்கள் :
ஒரு கைப்பிடிபிரண்டை
2 - 3சிகப்பு மிளகாய்
1 Tspஉளுத்தம் பருப்பு
1 Tspகடலை பருப்பு 
3 Tspநிலக்கடலை 
1/2 Tspஆளி விதை
1 Tspஇஞ்சி துண்டுகள் [ விரும்பினால் ]
4 -5மிளகு
1/4 Tspகொத்தமல்லி விதை
2 Tsp எலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, நிலகடலை ஆகியவற்றை சிவக்கும் வரை வறுக்கவும்.
இலேசாக சிவக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லி விதை, மிளகு மற்றும் ஆளி விதிகளை சேர்த்து படபடவென ஆளி  விதை பொறியும் வரை வறுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அல்லது மிக்ஸி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அடுத்து அதே வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி துண்டுகளை நன்கு சிவக்கும் வரை வதக்கி  எடுக்கவும்.

மேலும் சிறிது எண்ணெய் விட்டு பிரண்டை துண்டுகளை வதக்கவும்.
பிரண்டையை நன்கு வதக்குவது மிகவும் அவசியம்.
இல்லையெனில் தொண்டையில் அரிப்பெடுக்கும்.

இவையனைத்தையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி துவையல் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்.
உப்புமா, பொங்கல் மற்றும் அரிசி சுண்டல் போன்ற சிற்றுண்டிகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

Pirandai thuvaiyal




மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பொடுதலை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல் வடவத்துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Sunday, May 8, 2016

KadalaiParuppu-Chutney

#கடலைபருப்புசட்னி : #சட்னி என்றவுடன்  நினைவுக்கு வருவது தேங்காய் சட்னிதான். தேங்காய் சட்னி செய்ய பொட்டுக்கடலை மிக மிக அவசியம். எப்போதும் ஒரே மாதிரி சட்னி அரைத்து சாப்பிட்டால் அலுப்பு தட்டி விடும்.
அதனால் பொட்டுக்கடலைக்குப் பதிலாக கடலை பருப்பு கொண்டு சட்னி செய்து பார்த்தேன். வறுத்த கடலை பருப்பின் மணமும் மிளகாயின் காரமும் சேர்ந்து சட்னி மிக மிக அருமையாக இருந்தது.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.

கடலைபருப்பு சட்னி

தேவையான பொருட்கள் :
3 - 4 Tspகடலை பருப்பு
2 - 3சிகப்பு மிளகாய்
2 - 3பூண்டு பற்கள்
1/2 கப்தேங்காய் துருவல்
1 - 1 1/2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
3/4 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
8 - 10கறுவேப்பிலை
2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
அடுப்பை பற்ற வைத்து வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் சிகப்பு மிளகாயை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
வறுத்ததை தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே வாணலியில் கடலை பருப்பை நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பருப்பை மிளகாய் வைத்திருக்கும் தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பிறகு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்.
அரைத்த சட்னியின் சுவையை சரி பார்க்கவும்.
தேவையெனில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் மிக்ஸியை ஒரு சுற்று சுற்றி அரைக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் வாணலியை அடுப்பில் 1 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு போட்டு வெடித்தவுடன் கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
தாளித்ததை சட்னியின் மீது கொட்டவும்.
சுவையும் காரமும் நிறைந்த சட்னி தயார்.
அனைத்து டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சட்னி ஆகும்.
கடலைபருப்பு சட்னி




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.

பன்னீர் மசாலா கறி வாழைப்பூ குழம்பு வல்லாரை சட்னி
நெல்லிக்காய் புதினா துவையல் இஞ்சி துவையல்

மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

தொட்டுக்க


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.