Search This Blog

Showing posts with label கோதுமை ரவா. Show all posts
Showing posts with label கோதுமை ரவா. Show all posts

Monday, February 24, 2014

Broken Wheat Kali

கோதுமை ரவா களி : களி அரிசி நொய், பருப்பு மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பாகும். வெல்லம் கொண்டு செய்யும் போது பதம் தப்பினால் கமர்கட் ஆகிவிடும் அபாயமும் உண்டு. ஆனால் குக்கரில் செய்யும் போது அந்த  பயம் இல்லை. இந்த முறை கோதுமை ரவா  கொண்டு முயற்சி செய்தேன். மிக அருமையான சுவையுடன் இருந்தது.


இங்கு குக்கரில் மிகவும் இலகுவாக களி  செய்வது எவ்வாறு என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
3/4கப்                                    வரகு அரிசி
1/4Tbsp                                     பயத்தம் பருப்பு
1/2 கப்                                    தேங்காய் துருவல்
1/2 கப்                                    வெல்லம் [ அட்ஜஸ்ட் ]
3                                              ஏலக்காய்
1 சிட்டிகை                            உப்பு
2 Tsp                                        நெய்

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விடாமல் கோதுமை ரவாவை வாசனை வரும் வரை வறுக்கவும்.


ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இப்போது பயத்தம் பருப்பை ( பச்சை பருப்பு ) சிவக்க வறுக்கவும்.

வறுத்த பருப்பை கொர கொர என மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இடித்து போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும்.
ஒரு கரண்டி கொண்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
வெல்லத் தண்ணீரை டீ வடிகட்டியால் மண்ணை அகற்ற வடிகட்டிக் கொள்ளவும்.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் வறுத்த கோதுமை ரவா, ஒன்றிரண்டாக உடைத்த பயத்தம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் உப்பை எடுத்துக்கொள்ளவும்.
களி  செய்ய 2 கப் திரவம் தேவை.
வெல்லத் தண்ணீருடன் மேலும் தண்ணீர் விட்டு 2 கப் அளவாக்கி குக்கரில் விடவும்.


குக்கரை மூடி வெயிட் வைத்து அதிக தீயில் மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின் தீயை குறைத்து 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

ஆவி முற்றிலும் அடங்கியபின் மூடியை திறக்கவும்.
நெய் விட்டு  நன்கு கலக்கி விடவும்.
சுவையான இனிப்பான கோதுமை களி தயார்.






Monday, February 17, 2014

Broken Wheat Payasam

கோதுமை ரவா பாயசம் : இன்று மதிய உணவிற்கு பிரிஞ்சி சாதம் செய்தேன். சாப்பிட்டவுடன் இனிப்பிற்காக என்ன பாயசம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். எல்லா வகையான பாயசமும் செய்து முடித்தாயிற்று. இன்று உடைத்த கோதுமையை கொண்டு செய்து பார்ப்போம் என முடிவு செய்தேன். எவ்வாறு என பார்க்கலாம்.

கோதுமை ரவா பாயசம்

தேவையான பொருட்கள் :
1 Tbsp குவித்து                                 உடைத்த கோதுமை ( கோதுமை ரவா )
1 சிட்டிகை                                        உப்பு
1 Tbsp                                                   சர்க்கரை [ sugar ]
1 சிறிய துண்டு                              ஜாதி பத்திரி
4                                                           பாதாம் பருப்பு, சீவி வைக்கவும்
1 கப்                                                    பால்
1/2 Tsp                                                 நெய்

செய்முறை :
வாணலியை சூடாக்கி கோதுமை ரவாவை நெய் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.


அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாலை சூடாக்கவும்.
அதில் வறுத்து வைத்துள்ள ரவாவை சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும்.
நன்கு வெந்ததும் சர்க்கரை மற்றும் ஜாதி பத்திரியை பொடியாக்கி சேர்க்கவும்.
கரண்டியால் கலக்கி சர்க்கரையை கரைத்து விடவும்.
5 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
சுவையான கோதுமை ரவா பாயசம் தயார்.
பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பாதாம் துகள்களை தூவி பரிமாறவும்.
வறுத்த கோதுமையின் மணத்துடன் மிக மிக அருமையான பாயசம்!!.....

கோதுமை ரவா பாயசம்






கோதுமை ரவா கொண்டு தயாரிக்கக் கூடிய மற்ற உணவு வகைகள் :

கோதுமை ரவா கஞ்சி 

கோதுமை ரவா இட்லி 

கோதுமை ரவா உப்புமா 
கோதுமை ரவா பொங்கல் 

Monday, February 3, 2014

Broken Wheat Idly

#கோதுமைரவாஇட்லி : சில நாட்களுக்கு முன் ரவா இட்லி செய்து அதன் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இம்முறை உடைத்த கோதுமை ( #கோதுமைரவா ) கொண்டு எவ்வாறு இட்லி செய்யலாம் என பார்ப்போம்.
1 கப் உடைத்த கோதுமை கொண்டு 12 இட்லிகள் செய்யலாம்.

கோதுமை ரவா இட்லி

தேவையான பொருட்கள் :
1  கப்                                          கோதுமை ரவா
1/2 கப்                                         தயிர்
1 பாக்கெட்                               ஈனோ ப்ரூட் சால்ட்
3/4 Tsp                                          உப்பு

ஊற வைக்க :
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
1 Tsp                                             கடலை பருப்பு


தாளிக்க :
4                                                   முந்திரி பருப்பு
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             கடலை பருப்பு
3 Tsp                                             நில கடலை இரண்டாக பிளந்தது
1 அ 2                                           பச்சை மிளகாய், பொடியாக அறியவும்
10 அ 15                                       கருவேப்பிலை, கிள்ளி வைக்கவும்
1 Tsp                                             இஞ்சி பொடியாக நறுக்கியது
1/4 Tsp                                          பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் )
3 Tsp                                             எண்ணெய்

மாவுடன் கலக்க :
1/4 கப்                                         காரட் துருவியது
1                                                   வெங்காயம் பொடியாக நறுக்கவும் ( விருப்பப்பட்டால் )
1/4 கப்                                         குடை மிளகாய் பொடியாக நறுக்கியது ( விருப்பப்பட்டால் )
1 Tbsp                                           பச்சை பட்டாணி ( விருப்பப்பட்டால் )

செய்முறை :

ஊறவைக்க வேண்டிய பருப்பை கழுவி ஊற வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை ரவாவையும் உப்பையும் சேர்த்து தயிர் ஊற்றி கலந்து வைக்கவும். தேவை பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து  3 Tsp எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பு, முந்திரி பருப்பு  மற்றும் நில கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இப்போது பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
இப்போது காரட் மற்றும் பட்டாணியை சேர்த்து ஒரு சில மணித்துளிகள் வதக்கி மாவில் சேர்த்து, ஊற வைத்த பருப்பையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவை பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் நீர்க்கவோ இருக்கக் கூடாது.
இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
மாவுடன்   ஈனோ ப்ரூட் சால்ட்  நன்றாக கலந்து விடவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
இட்லி பானையில் வைத்து மூடி ஆவியில் 10 நிமிடங்கள்  வேக வைக்கவும்.
ஒரு குச்சி கொண்டு இட்லியில் சொருகி பார்க்கவும். வெந்து விட்டால் மாவு குச்சியில் ஒட்டாமல் இருக்கும். வேகவில்லை என்றால் மேலும் 3 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு தேக்கரண்டியால் இட்லியை எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து அடுக்கவும்.
பிறகு மறுபடியும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி மறு முறையும் மாவை ஊற்றி அடுப்பில் வேக வைத்து அடுத்த ஈடை எடுக்கவும்.

சுவையான கோதுமை ரவா இட்லி தயார்.
தேங்காய் சட்னி அல்லது பூண்டு மிளகாய் சட்னி யுடன் பரிமாறவும்.
கோதுமை ரவா இட்லி





மற்றும் சில சமையல் குறிப்புகள்

குதிரைவாலி இட்லி
குதிரைவாலி இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
ரவா பாப்பரை இட்லி
ரவா பாப்பரை இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
சோள இட்லி
சோள இட்லி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க


Thursday, January 16, 2014

Broken Wheat Kanji

#கோதுமைரவாகஞ்சி :  உடைத்த #கோதுமைகுருணை யை #கோதுமைரவா என்றும் கூறலாம். இதனை கொண்டு சில தினங்களுக்கு முன் உப்புமா மற்றும் பொங்கல் செய்வதெப்படி என பார்த்தோம். இப்போது மிக எளிமையாக கஞ்சி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

கோதுமை ரவா கஞ்சி


தேவையான பொருட்கள் :

கோதுமை ரவா

1/ 4 கப்                                  கோதுமை ரவா
1/4 கப்                                   பால்
1 கப்                                     தண்ணீர்
1/4 Tsp                                  உப்பு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் சூடேற்றவும்.
பாத்திரத்தின் அடியில் சிறு சிறு காற்றுக் குமிழிகள் வர ஆரம்பித்தவுடன் கோதுமை ரவாவை சேர்க்கவும்.
தீயை குறைவாக வைத்து வேக விடவும்.


நன்கு வேக ஏறக்குறைய  10 முதல் 15 நிமிடங்கள்  ஆகும்.


நன்றாக மலர்ந்து வெந்த பிறகு பாலை சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


உப்பு சேர்த்து தீயை அணைத்து விடவும்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து ஊறுகாயுடன் பரிமாறவும்.

கோதுமை ரவா கஞ்சி

வேறு சில கஞ்சி செய்முறைகள்

கம்பு கூழ் குதிரைவாலி வெந்தய கஞ்சி மக்காசோளரவா கஞ்சி

Tuesday, January 14, 2014

Broken Wheat Upma

கோதுமை ரவா உப்புமா : டிபன் வகைகளில் உப்புமா என்றவுடன் பலரது முகம் போகும் போக்கை பார்த்தால் ஏதோ சாப்பிடவே முடியாத பொருள் போல தோன்றும். ஆனால் சரியான பதத்தில் தேவையான பொருட்களை கொண்டு செய்யும் பொது தேவாமிர்தமாக இருக்கும். செய்தவுடன் சூடாக சாப்பிட்டால் மிக மிக சுவையாக இருக்கும்.
உப்புமாவை அரிசி, ரவா, சிறு தானியங்கள் கொண்டு செய்யலாம். இங்கு உடைத்த கோதுமை ரவா கொண்டு எவ்வாறு செய்வது என காணலாம்.
கொடுக்கப்பட்டுள்ள அளவு இரண்டு பேர் சாப்பிட சரியாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :
கோதுமை ரவா                            : 1 கப்
உப்பு                                                   : 2 Tsp
வெங்காயம்                                    : 1
பச்சை  மிளகாய்                           : 3 ( அட்ஜஸ்ட் )
கருவேப்பிலை                             : 10 - 12
இஞ்சி                                                : சிறு துண்டு

பொடியாக அரிந்த காய்கறிகள் :
காரட்                                                  : 1 Tbsp
முட்டைகோஸ்                             : 1 Tbsp ( விருப்பமானால் )
குடைமிளகாய்                               : 1 Tbsp  ( விருப்பமானால் )
பச்சை பட்டாணி                           : 1 Tbsp  ( விருப்பமானால் )

தாளிக்க :
கடுகு                                                  : 1 Tsp
உளுத்தம் பருப்பு                           : 1 Tsp
கடலை பருப்பு                               : 3 Tsp
பெருங்காயம்                                  : சிறு துண்டு
எண்ணெய்                                        : 2 Tsp

செய்முறை :
அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.
எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனையுடன் இலேசாக நிறம் மாறியதும்
காரட், முட்டைகோஸ், பட்டாணி  மற்றும் குடைமிளகாய் போட்டு 1/2 நிமிடம் வதக்கவும்.
உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.


கொதித்ததும் கோதுமை ரவாவை கழுவி சேர்க்கவும்.


நன்கு கலந்து விட்டு மூடி சிறிய தீயில்  வேக விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.


வேக சுமார் பத்து நிமிடங்களாகும்.


இப்போது சுவையான கோதுமை ரவா உப்புமா தயார்.
தேங்காய் சட்னியுடன் சுவைக்கவும்.





மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
வரகரிசி உப்புமா
வரகரிசி
உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
பாப்பரை அரிசி உப்புமா
பாப்பரை
அரிசிஉப்புமா