கோதுமை ரவா உப்புமா : டிபன் வகைகளில் உப்புமா என்றவுடன் பலரது முகம் போகும் போக்கை பார்த்தால் ஏதோ சாப்பிடவே முடியாத பொருள் போல தோன்றும். ஆனால் சரியான பதத்தில் தேவையான பொருட்களை கொண்டு செய்யும் பொது தேவாமிர்தமாக இருக்கும். செய்தவுடன் சூடாக சாப்பிட்டால் மிக மிக சுவையாக இருக்கும்.
உப்புமாவை அரிசி, ரவா, சிறு தானியங்கள் கொண்டு செய்யலாம். இங்கு உடைத்த கோதுமை ரவா கொண்டு எவ்வாறு செய்வது என காணலாம்.
கொடுக்கப்பட்டுள்ள அளவு இரண்டு பேர் சாப்பிட சரியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவா : 1 கப்
உப்பு : 2 Tsp
வெங்காயம் : 1
பச்சை மிளகாய் : 3 ( அட்ஜஸ்ட் )
கருவேப்பிலை : 10 - 12
இஞ்சி : சிறு துண்டு
பொடியாக அரிந்த காய்கறிகள் :
காரட் : 1 Tbsp
முட்டைகோஸ் : 1 Tbsp ( விருப்பமானால் )
குடைமிளகாய் : 1 Tbsp ( விருப்பமானால் )
பச்சை பட்டாணி : 1 Tbsp ( விருப்பமானால் )
தாளிக்க :
கடுகு : 1 Tsp
உளுத்தம் பருப்பு : 1 Tsp
கடலை பருப்பு : 3 Tsp
பெருங்காயம் : சிறு துண்டு
எண்ணெய் : 2 Tsp
செய்முறை :
அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனையுடன் இலேசாக நிறம் மாறியதும்
காரட், முட்டைகோஸ், பட்டாணி மற்றும் குடைமிளகாய் போட்டு 1/2 நிமிடம் வதக்கவும்.
மற்ற சமையல் குறிப்புகள் :

உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும் கோதுமை ரவாவை கழுவி சேர்க்கவும்.
நன்கு கலந்து விட்டு மூடி சிறிய தீயில் வேக விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.
வேக சுமார் பத்து நிமிடங்களாகும்.
இப்போது சுவையான கோதுமை ரவா உப்புமா தயார்.
தேங்காய் சட்னியுடன் சுவைக்கவும்.

|
|
|
||||||
|
|
|
No comments:
Post a Comment