Search This Blog

Sunday, January 19, 2014

Tomato Soup

#தக்காளிசூப் : தினமும் தக்காளி நீங்கலாக வெவ்வேறு காய் , கீரை மற்றும் காளான் கொண்டு  சூப் தயாரித்து விட்டேன் .  இரு தினங்களுக்கு முன் தக்காளி சூப் செய்வதெப்படி என்ற பிரபல சமையல் வல்லுநர் சஞ்சீவ் கபூர் வீடியோ பார்த்தேன். பிறகு என்னிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு என் விருப்பப் படி சூப்பை தயாரித்தேன்.

தக்காளி சூப்


தேவையான பொருட்கள் :


1 நடுத்தர அளவு                   தக்காளி
1 சிறிய அளவு                       வெங்காயம், நீள வாக்கில் அரியவும்
3 பற்கள்                                   பூண்டு , நீள வாக்கில் அரியவும்
2 Tsp                                            கொத்தமல்லி பச்சை விதை ( கிடைத்தால் )
1/2 Tsp                                         மிளகு
1 அ 2                                          பிரிஞ்சி இலை
1 Tbsp                                          ஓட்ஸ்
1/2 Tsp                                         எண்ணெய்
1 Tsp                                            வெண்ணெய்

அலங்கரிக்க :
மிளகுபொடி மற்றும் கொத்தமல்லி தழை

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
சூடாகியதும் பிரிஞ்சி இல்லை, பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி விதை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து மிளகையும் போட்டு சிறிது வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தக்காளி மிருதுவாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி ஆற விடவும்.
ஆறியவுடன் வெந்த பொருட்களை மட்டும் எடுத்து மிக்சியில் கூழாக்கவும்.
இந்த கூழை முன்பு வேகவைத்த அதே வாணலியில் ஊற்றி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.
இப்போது ஓட்ஸ் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கூழ் போல வந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கவும்.
சூப் கிண்ணத்தில் ஊற்றி மிளகு பொடி தூவி மல்லி தழையால் அலங்கரித்து பருகவும்.
தக்காளி சூப் தக்காளி சூப்

குறிப்பு :
இரண்டு  Tbsp காரட் துண்டுகளையும் தக்காளியுடன் சேர்த்து வேகவைத்து கொள்ளலாம்.
க்ரீம் கடைசியாக சேர்த்தும் சூப் செய்யலாம்.

மற்ற சூப் வகைகள் முயற்சி செய்து பார்க்க :
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லிசூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்

No comments:

Post a Comment