புளிச்சாறு : பருப்பு துவையல் செய்யும் போது மட்டுமே இந்த ரசம் செய்யப்படும்.
பெயருக்கு ஏற்ற வாறு நல்ல புளிப்பும் காரமும் கொண்டதாக இருக்கும்.
இனி எப்படி என பார்க்கலாம்.
பெயருக்கு ஏற்ற வாறு நல்ல புளிப்பும் காரமும் கொண்டதாக இருக்கும்.
இனி எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறு நெல்லிக்காய் அளவு புளி
1/2 Tsp சீரகத்தூள்
1/2 Tsp மல்லித்தூள்
1/2 Tsp ( அட்ஜஸ்ட் ) மிளகாய்த்தூள்
1/4 Tsp பெருங்காயத்தூள்
1 1/2 Tsp உப்பு
தாளிக்க :
1 Tsp கடுகு
2 சிகப்பு மிளகாய் , ஒன்றிரண்டாக உடைக்கவும்
1 Tsp கடலை பருப்பு
1 Tsp துவரம் பருப்பு
1/2 Tsp வெந்தயம்
வதக்க :
1 சிறிய அளவு வெங்காயம் , அரிந்து வைக்கவும்
3 பற்கள் பூண்டு , நசுக்கிக்கொள்ளவும்
10 கருவேப்பிலை
செய்முறை :
புளியை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள பொடிகளையும் உப்பையும் சேர்க்கவும்.
1 கப் தண்ணீரையும் சேக்கவும்.
இப்போது அடுப்பில் வாணலியை வைத்து என்னை 1 தேக்கரண்டி விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடித்ததும் பெருங்காயம் மற்றும் இதர பருப்பு வகைகளையும் சிவக்க வறுத்த பின் கருவேப்பிலை,வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி புளித்தண்ணீரில் கொட்டவும்.
அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
கொதித்து மேலே நுரை பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.
பருப்புத் துவையல் சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
சூடான சாதத்தில் இந்த ரசத்தை விட்டு சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment