#அமராந்த்பாயசம் 1 : #அமர்நாத்விதைகள் ( அ ) #அமராந்த் என்பது ஒரு கீரையின் விதையாகும். இதனை #அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.
அமர்நாத் கீரை & விதை பயன்கள்
அமராந்த்
அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய
Amaranth Plant
இனி இதன் விதையை கொண்டு பாயசம் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1 Tbsp அமர்நாத் விதைகள் [ அமராந்தம் ]
1/2 கப் பால்
1/4 கப் [ அட்ஜஸ்ட் ] வெல்லம் பொடித்தது
ஜாதிக்காய் சிறு துண்டு அல்லது ஜாதி பத்திரி சிறு துண்டு.
3 அ 4 பாதாம் பருப்பு
1 சிட்டிகை உப்பு
செய்முறை :
அமர்நாத் விதைகளை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இதுவும் கச கசா வை அரைப்பது போல சிறிது சிரமமான வேலைதான்.
நன்கு அரைத்தால் பால் போல அரை பட்டுவிடும்.
ஜாதிக்காயை பொடித்து தனியே எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்.
கரைந்ததும் வடிகட்டி மீண்டும் ஒரு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த அமர்நாத் விதைகளை பாலுடன் கலக்கவும்.
அடுப்பில் குறைந்த தீயில் வைத்து சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
இல்லையெனில் அடி பிடித்துக் கொள்ளும்.
நன்கு கஞ்சி போல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து கலக்கி விடவும்.
ஜாதிக்காய் தூளை சேர்க்கவும்.
சுவையான ஒரு வித்தியாசமான பாயசம் தயார்.
ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து பாதாம் துருவலை தூவி பரிமாறவும்.
குறிப்பு :
பால் சேர்த்து செய்யும் போது வெல்லம் சேர்த்த பின் பாயசத்தை கொதிக்க விட்டால் திரிந்து விடும். அமராந்த் பாப்பரை பால் பாயசம்
மேலும் சில பாயச வகைகள் முயற்சி செய்து பார்க்க :
Amaranth Seeds or Amarnath seeds |

Amaranth seeds Payasam |

No comments:
Post a Comment