Search This Blog

Thursday, January 2, 2014

Coconut Chutney With Red Chilly

#தேங்காய்சட்னிசிகப்புமிளகாயுடன் : பொதுவாக தேங்காயுடன் பச்சை மிளகாய் பொட்டுகடலை ( வறுகடலை ) கொண்டே #சட்னி செய்யப்படும். பச்சை மிளகாய் இல்லாத போது சிகப்பு மிளகாயை வைத்தும் தேங்காய் சட்னி செய்யலாம். வறுத்த சிகப்பு மிளகாயின்  மணத்துடன் தேங்காயின் சுவையுடன் அருமையாக இருக்கும்.
எப்படி என பார்க்கலாம்.

தேங்காய்சட்னி சிகப்பு மிளகாயுடன்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                              தேங்காய் துருவல்
2 அ 3                               சிகப்பு மிளகாய்
1 Tsp                                 கடலை பருப்பு
1 1/2 Tbsp                          பொட்டு கடலை ( வறுகடலை )
1 Tsp                                 எலுமிச்சை சாறு
1/2 Tsp                              உப்பு
1 Tsp                                எண்ணெய்

தாளிக்க :

1 Tsp                               கடுகு
10                                   கருவேப்பிலை
1/2 Tsp                           எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானதும் மிளகாயை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பிறகு கடலை பருப்பை வறுத்து எடுக்கவும்.
மிக்சியில் எலுமிச்சை சாறு நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும்  எடுத்துக் கொள்ளவும்.


தண்ணீர் விடாமல் முதலில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
திப்பிதிப்பியாக அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.
விருப்பப்பட்டால் மைய அரைத்துக் கொள்ளலாம்.

வாணலியில் கடுகை வெடிக்க விட்டு கருவேப்பிலையையும் வறுத்து சட்னியின் மேலே ஊற்றவும்.

சுவையான தேங்காய் சட்னி தயார்.
இட்லி, தோசை, உப்புமா மற்றும் அரிசி சுண்டல் போன்ற உணவு வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.




அசல் தேங்காய் சட்னி :
தேங்காய் சட்னி 


No comments:

Post a Comment