Search This Blog

Monday, January 27, 2014

Capsicum Sambar

குடைமிளகாய் சாம்பார் : குளிர் காலத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய காய்களுள் குடை மிளகாயும் ஒன்று. குடை மிளகாய்க்கு என்று தனி மணமும் சுவையும் உண்டு. இதனை கொண்டு சாம்பார் செய்யும் போது சாம்பார் தனி மணத்துடன் கூடுதல் சுவையுடன் இருக்கும். இப்போது எப்படி செய்வது என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
1 அ 2                                                 குடை மிளகாய், சிறு துண்டுகளாகவும்
1 நெல்லி அளவு                          புளி
3 Tbsp                                                 துவரம் பருப்பு வேகவைத்தது  
6                                                         சின்ன வெங்காயம், உறித்துக் கொள்ளவும்


1 சிறிய அளவு                             தக்காளி, சிறு துண்டுகளாக்கவும்
2                                                          பச்சை மிளகாய்
8                                                          கருவேப்பிலை
3 Tsp                                                   சாம்பார் மிளகாய் தூள்
1 சிட்டிகை                                     மஞ்சத்தூள்
1 Tsp                                                   மல்லித்தூள்
2 Tsp                                                   உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                               கடுகு
1 சிறிய துண்டு                           பெருங்காயம்
1 Tsp                                                  எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு பெருங்காயம், கருவேப்பிலை மற்றும் நீள  வாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
இப்போது சின்ன வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.


தக்காளி துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி மஞ்சத்தூள், மல்லித்தூள்,சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கவும்.
உடனே வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
வெங்காயம் வெந்தவுடன் 1/2 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
இந்த நிலையில் உப்பை சேர்க்கவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
சாம்பார் அவரவர் விருப்பபடி சிறிது நீர்க்கவோ அல்லது கெட்டியாகவோ செய்ய தண்ணீரின் அளவை கூட்டி குறைக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கருவேப்பிலை கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும். 



No comments:

Post a Comment