#ரவாதோசை : பெரும்பாலானவர்கள் ரவா தோசை சாப்பிடுவதற்காகவே சிற்றுண்டி சாலைக்கு செல்வதுண்டு. ஆனால் இந்த தோசையை சிற்றுண்டி சாலையில் செய்வதை விட அருமையாக வீட்டிலேயே செய்ய முடியும். ஒரே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு தோசை சுட்டு எடுக்க தோராயமாக நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆகும். அதனால் இந்த டிபனை காலை உணவுக்கு தயாரிப்பதாக இருந்தால் எப்போதையும் விட சற்று முன் கூட்டியே செய்ய தொடங்கி விட வேண்டும்.
இப்போது மொறு மொறு ரவா தோசை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1 கப் ரவா
1/2 கப் கோதுமை மாவு
1/2 கப் தோசை அல்லது இட்லி மாவு
3/4 Tsp உப்பு
மாவில் சேர்க்க
2 Tsp சீரகம்
1 Tsp மிளகுத்தூள் கொர கொரவென பொடித்தது
1 வெங்காயம்
10 - 15 கருவேப்பிலை
1 பச்சை மிளகாய் ( விருப்பப்பட்டால் )
செய்முறை :
மாவு அனைத்தையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கருவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சீரகம், மிளகுத்தூள் மற்றும் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கலக்கவும்.
காரமாக வேண்டுமெனில் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி அதையும் சேர்க்கவும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும்.
சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும்.
தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு வட்டமாக ஊற்ற ஆரம்பித்து மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும் .
அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும்.
இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.
சட்னி யுடள் பரிமாறவும்.
குறிப்பு : இட்லி அல்லது தோசை மாவுக்கு பதில் 1/4 கப் தயிரும் 1/4 கப் அரிசி மாவும் சேர்த்து மாவு தயாரிக்கலாம்.
காரட் துருவி சேர்த்தும் தோசை தயாரிக்கலாம்.
அவ்வப்போது தண்ணீர் சேர்த்து மாவை நீர்க்க இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :
தொட்டுக்க சட்னி வகைகள்

|
|
|
||||||
|
|
தொட்டுக்க சட்னி வகைகள்
No comments:
Post a Comment