பருப்பு துவையல் : பருப்பு துவையலும் புளி சாறும் எல்லோராலும் விரும்பப் படும் உணவு வகையாகும். சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பருப்புத் துவையல் தேவையான அளவு சேர்த்து பிசைந்து புளிச்சாறு தொட்டு சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான். எப்போதையும் விட சிறிது கூடுதலாகவே சாப்பிட தூண்டும்.
இனி இந்த துவையல் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
3 Tbsp துவரம் பருப்பு
2 அ 3 ( அட்ஜஸ்ட் ) சிகப்பு மிளகாய்
5 மிளகு
1/3 கப் தேங்காய் துருவல்
4 பற்கள் பூண்டு
1/2 Tsp உப்பு
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து 1/2 Tsp எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
மிக்ஸ்சியில் மற்ற எல்லா பொருட்களுடன் வறுத்தவற்றையும் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மேற்கூறியபடி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

No comments:
Post a Comment