Search This Blog

Saturday, January 25, 2014

Kusum Greens and Sprouted Green Gram Poriyal

குசும் கீரை பொரியல் [ பரா கீரை ] : சத்திஸ்கர் மாநிலத்தில் வகை வகையான கீரைகள் கிடைக்கின்றன.
இங்கு வாழும் மக்கள் அதிக அளவில் கீரைகளை சமையலில் பயன்படுத்துகிறார்கள். இந்த முறை குசும்  என அழைக்கப்படும் கீரையை மார்க்கட்டில் இருந்து வாங்கி வந்தேன்.

kusum bhaji

 பாலக் கீரையை விட சிறிது அழுத்தமாகவும் முள்ளங்கி கீரையை விட மிருதுவாகவும் இருந்தது. இதனை கொண்டு பொரியல் செய்து பார்க்கலாம் என முளை கட்டிய பயறுடன் சேர்த்து தயாரித்தேன். நன்றாக சுவையுடன் இருந்தது. அதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை,

kusum bhaji

தேவையான பொருட்கள் :


1/2 கப்                                     குசும்  கீரை  பொடியாக நறுக்கியது
1/4 கப்                                     முளை கட்டிய பயறு
1 Tbsp                                      காரட் பொடியாக நறுக்கியது
1 Tbsp                                      குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
4 அ 5                                       காளான், சிறு துண்டுகளாக நறுக்கவும்
1 Tsp                                        பச்சை கொத்தமல்லி விதை
அல்லது
2 Tsp                                       கொத்தமல்லி தழை  பொடியாக நறுக்கியது
3 பற்கள்                                பூண்டு, நசுக்கிகொள்ளவும்.

தாளிக்க :

1 Tsp                                       கடுகு
1 1/2 Tsp                                 உளுத்தம் பருப்பு
1 அ 2                                     சிகப்பு மிளகாய்
1 Tsp                                       எண்ணெய்

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்  விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடித்தபின் மிளகாயை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். உளுத்தம் பருப்பையும் சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின் பூண்டு சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
அடுத்து கொத்தமல்லி விதை மற்றும் காரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.


இப்போது கீரையை சேர்த்து 1 நிமிடம் வதக்கிவிட்டு பயறு மற்றும் குடைமிளகாய் துண்டுகள் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து வதக்கி மூடி 2 நிமிடம் வேக விடவும்.
திறந்து காளான் துண்டுகளையும் சேர்த்து கிளறி விட்டு மறுபடியும் 1 நிமிடம் மூடி வேக வைக்கவும்.


உப்பு சரி பார்க்கவும். தீயை அதிகப் படுத்தி  தண்ணீர் சுண்டியவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். விருப்பப்பட்டால் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கலாம்.

சுவையான சத்து மிகுந்த கீரை பயறு பொரியல் தயார்.

குசும் கீரை பொரியல்


மதிய உணவின் போது சாம்பார் மற்றும் ரசம் கலந்த சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

  • பொரியல் செய்யும் போது கீரையின் நிறம் மாறாமல் வேக வைத்து எடுப்பது மிக முக்கியம்.
  • கொத்தமல்லிக்கு பதில் கருவேப்பிலையை உபயோகப் படுத்தலாம்.
  • காரத்திற்கு ஏற்றவாறு மிளகாயை எடுத்துக் கொள்ளவும்.
  • இந்த கீரைக்குப் பதில் வேறு கீரை கொண்டும் இதே போல பொரியல் செய்யலாம். 




No comments:

Post a Comment