#நெல்லிக்காய்சட்னி : நெல்லிக்காயில் வைட்டமின் C மிக அதிகமாக இருக்கிறது. #நெல்லிக்காய் பண்டைய காலம் முதல் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால் நமது அன்றாட உணவில் நெல்லிக்காய் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Phyllanthus_emblica#Traditional_uses_of_amlaki
இதனை கொண்டு எவ்வாறு சட்னி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
2 அ 3 நெல்லிக்காய்
2 அ 3 சிகப்பு மிளகாய் ( அட்ஜஸ்ட் )
3 Tbsp தேங்காய் துருவல்
1 1/2 Tsp உளுத்தம் பருப்பு
1 சிறிய துண்டு பெருங்காயம்
1 கோலி குண்டு அளவு புளி
1/2 Tsp உப்பு
2 Tsp எண்ணெய்
செய்முறை :
நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மூடி வெயிட் போட வேண்டாம்.
ஆவி வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
நெல்லிக்காய் விதையை நீக்கிய பிறகு சின்ன துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும்.
அல்லது இட்லி பானையில் முழு நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து எடுத்து வைக்கவும். சூடு ஆறிய பின்னர் நடுவில் உள்ள விதையை நீக்கி விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் பெருங்காயம் வறுத்தெடுக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
இப்போது தேவையானால் எண்ணெய் விட்டு நெல்லிக்காய் போட்டு வதக்கி எடுக்கவும்.
சூடு ஆறியதும் வறுத்த பொருட்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
இந்த சட்னி பொங்கல், உப்புமா மற்றும் சுண்டல் போன்ற டிபன் வகைகளுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சாதத்துடன் சேர்த்து சிறிது நல்லெண்ணையுடன் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு :
நெல்லிக்காய்க்கு புளிப்பு சுவை உள்ளதால் புளியின் அளவை சிறிது குறைத்தே சேர்த்துக்கொள்ளவும்.
சுவைகளை சமன் செய்ய சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment