Search This Blog

Thursday, November 19, 2015

Varagarisi-Neer-Dosai

#வரகரிசிநீர்தோசை : #வரகரிசி சுருக்கமாக #வரகு #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதனை பற்றி அறிய கீழே கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கவும்.
வரகரிசி

இங்கு வரகரிசி கொண்டு சுவையான நீர் தோசை எவ்வாறு செய்யலாம் என காண்போம்.


வரகரிசி நீர்தோசை

தேவையான பொருட்கள் :
2 கப்வரகு அரிசி [ Kodo millet ]
1/2 கப்தேங்காய் துருவல்
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
தோசை சுட்டெடுப்பதற்கு தேவையான நல்லெண்ணெய்.


செய்முறை :
வரகரிசியை இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி மற்றும் தேங்காயை நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவையும் கழுவி மாவுடன் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அப்போதுதான் மெல்லிய தோசையாக சுட முடியும்.

இந்த மாவை புளிக்க வைக்க தேவை இல்லை.
உடனேயே தோசை சுடலாம்.

அடுப்பில் தோசைகல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி தோசைகல்லின் வெளி ஓரத்தில் இருந்து நடு வரை மாவை வட்டமாக ஊற்றவும். 

தோசையின் மேலும் விளிம்புகளை சுற்றியும் எண்ணெய் சொட்டு சொட்டாக விடவும்.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்களும் நடுவேயும் சிவக்க ஆரம்பிக்கும்.
தோசை வெந்து விட்டது என கொள்ளலாம்.
மென்மையாக தோசை திருப்பியால் தோசையின் மேல் தெளிக்கப்பட்ட எண்ணெயை பரப்பி விடவும்.
இவ்வாறு செய்வதால் தோசை காய்ந்து போகாமல் இருக்கும்.

இந்த தோசை ஒரு பக்கம் வெந்தால் போதுமானது.
திருப்பிப் போட தேவையில்லை.

தோசையை எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதேபோல தோசையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

சுவையான மென்மையான வரகரிசி நீர் தோசை தயார்.
காரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி சாம்பார் அல்லது தக்காளி சட்னி  யுடன்  சுவைக்கவும்.

Varagarisi [ Kodo millet ]
வரகரிசி நீர்தோசை வரகரிசி நீர்தோசை
வரகரிசி நீர்தோசை வரகரிசி நீர்தோசை





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க


ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி சர்க்கரை பொங்கல்
குதிரைவாலி சர்க்கரை
குதிரைவாலி பாயசம்
குதிரைவாலி பாயசம்

மற்ற வரகரிசி சமையல் குறிப்பிற்கு

வரகரிசி சமையல் குறிப்புகள்

சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

சிறுதானிய சமையல்



Friday, November 13, 2015

Thinai-Sakkarai-Pongal

#தினைசக்கரைபொங்கல் : #தினையரிசி அல்லது சுருக்கமாக #தினை #சிறுதானியம் வகையை சேர்ந்தது. சிறுதானியம் வகைகள் பசை தன்மை அற்றது. மேலும் சாப்பிட்டால் அமிலத் தன்மையை உண்டாக்குவதில்லை.
அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் நார் சத்து அதிக அளவில் கொண்டுள்ளது.
குறிப்பாக தினையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை தவிர புரத சத்தும் குறிப்பிட்ட அளவு தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய சத்துக்கள் கொண்ட சிறு தானியங்களுள் ஒன்றான தினையை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.
இனி சக்கரை பொங்கல் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

தினை சக்கரை பொங்கல்




தேவையான பொருட்கள் :
1/2 கப் தினை அரிசி
1/4 கப் பயத்தம் பருப்பு
1/2 கப்பால்
1 சிட்டிகைஉப்பு 
1 கப்வெல்லம் [ adjust ]
4ஏலக்காய்
சிறு துண்டு ஜாதிக்காய்
2 Tspசர்க்கரை
1 சிட்டிகைபச்சை கற்பூரம் [ Edible Camphor ]
4 Tspநெய்
4 - 5முந்திரி பருப்பு
5 - 6பாதாம் பருப்பு
செய்முறை :
சக்கரை பொங்கல் செய்ய துவங்குவதற்கு 5 அ 6 மணி நேரம் முன்பே பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைக்கவும்.
பொங்கல் செய்ய துவங்குவதற்கு முன்பு ஊறிய பாதாம் பருப்பின் தோலை நீக்கி விட்டு சிறு துகள்களாக நறுக்கி தனியே வைக்கவும்.

சக்கரையுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தினை அரிசியையும் பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு கழுவி 2 கப் தண்ணீர் மற்றும்  1/2 கப் பால் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு தினை-பருப்பு உள்ள பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி வேக விடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும். 
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை நசுக்கி போடவும்.
மிதமான தீயில் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் கரைந்ததும் மாசுக்களை நீக்க வடி கட்டவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய்யில் முந்திரியை சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

ஆவி அடங்கி குக்கரை திறந்ததும் அடுப்பை மறுபடியும் பற்ற வைத்து ஒரு அடி கனமான  பாத்திரத்தை சிறிய தீயின் மேல் வைக்கவும்.
வெந்த அரிசி பருப்பை சேர்த்து கரண்டியால் நன்கு மசித்தவாறு கிளறவும்.
இப்போது வெல்லம் கலந்த தண்ணீரை சேர்க்கவும்.
கை விடாமல் நன்கு கிளறவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய்-ஜாதிக்காய் பொடியையும் நெய்யையும் 
பிறகு ஊறவைத்து நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு துகள்களையும் சேர்த்து  கிளறவும்.

அடுப்பை அணைத்து விட்டு பச்சை கற்பூரம் நுணுக்கி போட்டு கலந்து விடவும்.
பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் தினை சக்கரை பொங்கல் எடுத்து வைக்கவும்.

கிண்ணத்தில் எடுத்து வைத்து வறுத்த முந்திரியால் அலங்கரித்து நெய் விட்டு சுவைக்கவும்.
சூடாக சுவைக்கும் பொது ருசியும் மணமும் அபாரமாக இருக்கும்.
மற்ற சிறு தானியங்களை விட இயற்கையாகவே தினையரிசியின் சுவை சிறிது இனிப்பாக இருக்கும்.
ஆதலால் சர்க்கரை பொங்கலும் மிக்க ருசியாக இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்!!
தினை சக்கரை பொங்கல் தினை சக்கரை பொங்கல்





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை பொட்டுக்கடலை 
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திருவாதிரை களி
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை இனிப்பு குழி பணியாரம்
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு

மற்ற சிறுதானிய சமையல் குறிப்பிற்கு

சிறுதானிய சமையல் வகைகள்



Thursday, November 5, 2015

Amaranth-Buckwheat-Paruppu-Payasam

#அமராந்த்பாப்பரைபருப்புபாயசம் : 

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்

#அமர்நாத்விதைகள் ( அ )  
#அமராந்த் என்பது ஒரு கீரையின் விதையாகும். இதனை #அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

அமராந்தம் போலவே #பாப்பரை யும் புரதம் அதிக அளவில் கொண்டுள்ள ஒரு விதையாகும். அதனால் அடிக்கடி இவ்விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நலமாகும்.
இவ்விரு விதைகளுடன் பயத்தம் பருப்பையும் சேர்த்து ஒரு சுவையான பாயசம் செய்வது எப்படி என காணலாம்.

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள் :
1 Tbspஅமராந்தம்
1 Tspபாப்பரை [ Buckwheat ]
1/8 cupபயத்தம் பருப்பு
2 or 3முந்திரி பருப்பு வறுத்தது
1/2 Cupவெல்லம் [ adjust ]
1 pinchஉப்பு
அரைக்க :
1 Tbspதேங்காய் துருவல்
1/2 Tspகசகசா
2ஏலக்காய்
சிறுதுண்டுஜாதிக்காய்

செய்முறை :
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸி அரைக்கும் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிய தீயில் சூடாக்கவும்.
அதில் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அமராந்த், பாப்பரை மற்றும் வறுத்த பருப்பு அனைத்தையும் எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு முறை தண்ணீரில் கழுவி வடித்து விடவும்.
பிறகு 3/4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வந்த பிறகு சிறிய தீயில் 3 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து வெந்த பருப்பு, அமராந்த், மற்றும் பாப்பரை ஆகியவற்றை ஒரு குழி கரண்டி கொண்டோ அல்லது உருளைகிழங்கு மசிக்கும் மத்தை கொண்டோ மசிக்கவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி கரைய வைக்கவும்.
வெல்லம் கரைந்த வுடன் அடுப்பிலிருந்து எடுத்து வடி கட்டவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் மசித்து வைத்துள்ளதை சேர்த்து கலக்கவும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
சிறிய தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஒன்றாக சேர்ந்து வந்ததும் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் ஜாதிக்காய் பொடியை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


Amaranth Buckwheat Paruppu Payasam


பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி வறுத்த முந்திரியை தூவி பருகவும்.
சுவையும் சத்தும் மிகுந்த அமராந்த் பாப்பரை பாயசம் தயார்.

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்






மேலும் சில பாயசம் வகைகளின் சமையல் குறிப்புகள்

காரட் தினை பாயசம் சாமை பாப்பரை பாயசம் அமராந்த் பாப்பரை பால் பாயசம்
குதிரைவாலி பால் பாயசம் ஜவ்வரிசி சேமியா பாயசம்