#ஆப்பம்வகைகள் : #ஆப்பம் என்பது தோசை வகையை சார்ந்த ஒரு பலகாரமாகும். #தோசை யை போலல்லாமல் ஆப்ப சட்டியில் அல்லது தோசை கல்லில் மூடி போட்டு ஒரு பக்கம் மட்டுமே சுட்டெடுக்கபடும். தோசையை விட மிருதுவானதாகும்.
ஆப்பமாவு தயாரிக்க அரிசி, வெந்தயம், உளுந்து மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து புளிக்க வைக்கப் படுகிறது. புளித்த மாவை கொண்டு மிருதுவான ஆப்பம் சுட்டெடுக்கப் படுகிறது. ஆப்பம் பொதுவாக தேங்காய் பாலுடனே சுவைக்கப் படுகிறது. விருப்பமானால் சட்னி அல்லது குருமாவுடனும் சுவைக்கலாம்.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. கலோரி அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்றது. மலச் சிக்கலை போக்கவல்லது.
இதன் கசப்பு தன்மையால் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை.
ஆப்பம் மாவை தயாரிக்க வெந்தயம் கணிசமான அளவில் சேர்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் வெந்தயத்தின் கசப்பு சிறிதும் உணரப்படுவதில்லை.
அதனால் இந்த பலகாரத்தை அடிக்கடி செய்வதின் மூலம் வெந்தயத்தின் பலனை அடையலாம்.
வெந்தயத்தை முளை கட்டி பிறகு ஆப்ப மாவு தயாரிக்க பயன் படுத்தினால் மேலும் பயனடையலாம்.
ஆனால் கேரளாவில் செய்யப்படும் ஆப்பம் பச்சரிசி, தேங்காய் இரண்டையும் அரைத்து, புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து ஆப்ப கடாயில் ஊற்றி சுட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு செய்யப்பட்ட ஆப்பம் கடலை கறியுடன் சுவைக்கப்படுகிறது.
எல்லா வகையான ஆப்பம் வகைகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

|
|
|
||||||
|
|
|
ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க
தொட்டுக்க
மற்ற டிபன் வகைகளை அறிந்து கொள்ள
டிபன் வகைகள்