Search This Blog

Monday, November 30, 2020

வில்வப்பழப்பானம்

 வில்வப்பழப்பானம் [ வில்வப்பழ ஜுஸ் ] : 

Bael fruit juice - வில்வப்பழப்பானம் [ வில்வப்பழ ஜுஸ் ]

வில்வம் அல்லது வில்வமரம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் ஸ்தலவிருட்சமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். நமது பெரியவர்கள் வில்வ இலைக்கொண்டு சிவனை பூஜித்தால் நல்ல பலனையடையலாம் எனச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் அதன் மகத்தான மருத்துவ குணங்களைப் பற்றி சொன்னதேயில்லை. நானும் கோயிலுக்கே உரிய மரம் போலும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன்.

வில்வம் அல்லது வில்வமரம் - Bael tree

சென்ற ஆண்டு எனது கணவர் பணி நிமித்தமாக மாறுதல் பெற்றதால் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள சித்தரஞ்சன் என்ற பெயர் கொண்ட ஒரு நகருக்கு குடி பெயர்ந்தோம். எங்களது வீட்டைச்சுற்றி மா, பலா, வாழை, அத்தி, கொடுக்காப்புளி, நாவல், முருங்கை, வேப்பம், இலந்தை மற்றும் பெயர் அறியாத பலவகை மரங்களுடன் ஒரு பெரிய வில்வ மரமும் உள்ளது. சென்ற வருடம் ஜூன் மாதத்தில் எனது கணவர் சித்தரஞ்சன் வந்து விட்டார். இந்த மரத்தின் காய்கள் கோடைகாலத்தில் காய்க்கும். கோடை முடியும் தருவாயில் சித்தரஞ்சனுக்கு குடி பெயர்ந்ததால் அவரால் வில்வப்பழத்தை சுவைக்க முடிந்தது.அப்போது எனது கணவர் கைபேசியில் பேசும்போது வில்வப்பழத்திலிருந்து சாறு எடுத்து சுவைத்ததாக கூறினார். அதன் பழச்சாறு நிரம்பிய கண்ணாடி குவளையின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார். பழச்சாறின் நிறம் கேரட்டைப் போல கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சு நிறத்தைக் கொண்டிருந்தது. அப்போதுதான் வில்வ மரத்தின் பழங்கள் சுவைப்பதற்கு உகந்தவை எனத் தெரிந்தது. நான் சித்தரஞ்சனுக்கு ஜூலை மாதத்தில்தான் வந்தடைந்தேன். அப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. வில்வப்பழம் காய்க்கும் காலமும் முடிவடைந்துவிட்டது. அதனால் இந்த வருடக் கோடையில்தான் சுவைக்க முடிந்தது. ஆனால் கோடையில் பழம் வரும் வரை வில்வத்தின் இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து காலை நேரத்தில்  தேநீராக உட்கொண்டு வந்தோம். மேலும் துளிர் இலைகளை சாலட் செய்யும் போது சேர்த்து சுவைத்து வந்தோம். இலைகளின் மணம் சற்றேறக்குறைய  மாங்காயின் மணத்தையும் வடுமாங்காயின் சுவையையும் ஒத்தே இருக்கிறது.

உலக வலைத்தளங்களில் வில்வ மரத்தினைப்பற்றி தேடிப் பிடித்து அதன் பயன்களை அறிந்து கொண்டேன். அவ்வாறு தேடிய பொழுதுதான் வில்வமரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம் போன்ற அனைத்து பாகங்களும் நமது உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என அறிந்துகொண்டேன்.

வில்வமரம் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த மரமாகும். வெப்பமண்டலம், துணை வெப்பமணடலம் மற்றும் இமாலய மலைப்பகுதிகளில் சுமார் 500 அடிவரை உள்ள பகுதிகளில் அதிகமாக் காணப்படுகிறது. காய வைக்கப்பட்ட இல்லை, வேர் மற்றும் மரப்பட்டைகள் மருத்துவத்திற்காக பயன் படுகிறது. பீஹார் மற்றும் மேற்கு வங்கப்பகுதிகளில் வில்வமரம் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவப் பொருட்கள் செய்வதற்கும் பழக்கூழ் தயாரிக்கவும் இம்மாநிலங்களில் இம்மரங்கள் பயிரிடப்படுகின்றன.

எனது வீட்டில் உள்ள மரம் மிகவும் பெரியது. அதன் அடி மரம் வேப்ப மரத்தைப் போன்று உள்ளது. சிறிய மரக்கிளைகள் கூர்மையான முட்களைக் கொண்டதாக உள்ளது.

வில்வப்பழம் - Bael fruit

வில்வப்பழம் BaelFruit என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Aegle marmelos.

பொதுவாக வில்வப்பழம் bael, Bengal quince, golden apple, Japanese bitter orange, stone apple or wood apple என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

வில்வ மரத்தின் பழம் விளாம்பழத்தைப்போல ஓடுடன் கூடியதாக இருக்கும். கோளவடிவமாக இல்லாமல் காம்பு பகுதியும் அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும். சில பழங்கள் பேரிக்காய் வடிவத்தைப் போன்றும் இருக்கும்.

வில்வப்பழம் - Bael fruit [ Aegle marmelos ]

வில்வப் பழத்தை தரையில் ஓங்கித் தட்டி அல்லது கத்தியால் தேங்காய் உடைப்பது போல மேல் ஓட்டை உடைக்க வேண்டும். ஓட்டினுள் பழத்தின் சதைப்பற்று வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மென்மையானதாக இருக்கும். அவை நார்கள் கூடியதாகவும் ஆரஞ்சு சுளைகளைப்போல அடுக்கப்பட்டிருக்கும். சதைப்பற்று விதைகளையும் தேன் போன்ற திரவத்தையும் கொண்டதாக இருக்கும். பழம் நல்ல மணம் கொண்டதாக இருக்கிறது. வில்வப்பழத்தின் சதைப்பற்று பொதுவாக தனிச்சுவை அற்றதாகவே உள்ளது. சில பழங்கள் சிறிது புளிப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். சதைப்பற்றின் நார்களை நீக்கி தண்ணீரில் கரைத்து வைத்தால் பழச்சாறு தயார். பழச்சாறு முதலில் நீர்க்க இருந்தாலும் நேரம் செல்லச்செல்ல கெட்டிப்பட்டுவிடும். தேன் போன்ற திரவத்தின் கோந்து தன்மையே இதற்குக் காரணம். இப்பழத்தின் மணம், சுவையற்றத் தன்மை மற்றும் கோந்து போல கெட்டிப்படும் தன்மை காரணமாக சர்பத் மற்றும் பழக்கூழ் செய்ய மற்ற பழங்களுடன் சேர்த்து உபயோகப் படுத்தப் படுகிறது.

வில்வப்பழம் - Bael fruit [ Vilva pazham ]

வில்வப்பழத்தில் கரோட்டினாய்டு என்ற வேதிப்பொருள் இருப்பதனால் ஆரஞ்சு வண்ணத்தைக் கொண்டதாக அதன் சதைப்பற்று உள்ளது. Tannins, அஸ்கார்பிக் acid மற்றும் riboflavin ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. அதனால் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B நிறைந்துள்ளது. நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இப்பழம் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் திறன் வாய்ந்தது என ஆய்வுகளின் வழியே நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது.

அதனால் வில்வப்பழம் கிடைத்தால் உடனே சுவைத்து பயன் பெறுங்கள்.

நன்கு பழுத்த பழம் எடை அதிகமாகவும் நல்ல மணமுடனும் இருக்கும்.


தேவையானவை :
2வில்வப்பழம்
2 சிட்டிகைஉப்பு [ adjust ]
2 Tbsp எலுமிச்சை சாறு [ adjust ]
1/2 Tsp மிளகுத்தூள் [ adjust ]
5 - 6புதினா இலைகள் [ விரும்பினால் ]

செய்முறை :

வில்வப்பழத்தின் ஓட்டை உடைத்து ஒரு தேக்கரண்டியின் உதவியால் பழத்தின் சதைப்பற்றை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.

2 முதல் 2 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கைகளால் அழுத்திப் பிசைந்து தண்ணீரில் கரைக்கவும்.

கரைக்கும் போது கையில் அகப்படும் நார்களை அகற்றி விடவும்.

உப்பும் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

கண்ணாடி குவளைகளில் ஊற்றி புதினா இலைகளை பியித்துப் போட்டு சிறிது மிளகுத்தூளைத்தூவி சுவைக்கவும்.

வில்வப்பழப்பானம் [ வில்வப்பழ ஜுஸ் ] - Bael fruit juice







மேலும் சில  பானம் வகைகள்
மாங்காய்பானம் - ஆம்பண்ணா
மாங்காய்பானம் - ஆம்பண்ணா
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்
முலாம்பழம் ஆரஞ்சு பழரசம்
முலாம்பழம் துளசி பழரசம்
முலாம்பழம் துளசி பழரசம்
முலாம்பழம் புதினா பழரசம்
முலாம்பழம் புதினா பழரசம்










Thursday, November 19, 2020

Vadavath_Thuvaiyal

 வடவத்துவையல் : இதனை வடகம் துவையல் என்றும் அழைப்பதுண்டு. 

வடவத்துவையல் [ Dried Onion Chutney ]

சின்ன வெங்காயம் விலை மலிவாக கிடைக்கும் போது வெங்காய வடவம் [ வெங்காய வடகம் ] செய்து வைப்பது தமிழர்களின் வழக்கம். இந்த வெங்காய வடவம் கூட்டு செய்யும் போது தாளித்து சேர்த்தால் அதன் சுவையே மிக அருமையாக இருக்கும். குழம்பு செய்யும் போது வெங்காய வடவம் தாளித்தால் தனித்துவமான சுவையுடன் இருக்கும்.

வெங்காய வடவம்

வெங்காய வடவத்தை எண்ணெயில் வறுத்து, தேங்காய், புளி, உப்பு மற்றும் வறுத்த சிகப்பு மிளகாயுடன் அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்தால் அருமையான துவையல் தயார்! 


தேவையானவை :
3 Tspவெங்காய வடவம்
4 - 5 Tspதேங்காய் துருவல்
கோலிகுண்டு அளவு புளி 
2 - 3சிகப்பு மிளகாய் [ adjust ]
1/2 Tspஉப்பு [ Adjust ]
2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :

ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை ஊறவைக்கவும்.

அடுப்பின் மீது மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் சிகப்பு மிளகாயை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

அடுத்து வெங்காய வடவத்தை போட்டு நன்கு பொறியும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.

வறுத்த வடவமும் மிளகாயும் சூடு ஆறிய பிறகு மற்ற பொருட்களுடன் மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுக்கவும்.

அம்மியில் அரைத்தால் கூடுதல் சுவையுடன் அருமையாக இருக்கும்.

உப்பு சரி பார்த்தபின் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வடவத் துவையல் பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சுவைக்க மிக அற்புதமான சட்னியாகும். 

சூடான சாதத்திலும் வடவத் துவையலை போட்டு  நல்லெண்ணெயுடன்  சேர்த்து பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.

இட்லி மற்றும் தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் அருமையான இணையாகும்.




குறிப்பு : வெங்காய வடவத்தில் உப்பு சேர்த்து செய்திருப்பதால் துவையல் அரைக்கும் போது சிறிது குறைத்தே உப்பு சேர்க்கவும்.



மற்ற சட்னி வகைகள் சில
மாங்காய் சட்னி 1
மாங்காய் சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு...
துரை துவையல்
துரை துவையல்
வல்லாரை தேங்காய் சட்னி
வல்லாரை தேங்காய்..
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்


சட்னி வகைகள்

விதவிதமான சிற்றுண்டி வகைகள்




Monday, November 16, 2020

Payasam_Varieties

 பாயசம் வகைகள் : பல வகையான பாயசங்களின் செய்முறை இணைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


பாயசம் வகைகள்
அமராந்த் பாயசம் 1
அமராந்த் பாயசம் 1
அமராந்த் பாயசம் 2
அமராந்த் பாயசம் 2
அமராந்த் கசகசா பாயசம்
அமராந்த் கசகசா பாயசம்
அமராந்த் பாப்பரை பால் பாயசம்
அமராந்த் பாப்பரை பால் பாயசம்
அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்
அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்
ஜவ்வரிசி சேமியா பாயசம்
ஜவ்வரிசி சேமியா பாயசம்
குதிரைவாலி பால் பாயசம்
குதிரைவாலி பால் பாயசம்
சாமை பாப்பரை பாயசம்
சாமை பாப்பரை பாயசம்
சாமை அரிசி பாயசம்
சாமை அரிசி பாயசம்
பாப்பரை பாயசம்
பாப்பரை பாயசம்
தினை அரிசி பாயசம்
தினை அரிசி பாயசம்
வரகரிசி பாயசம்
வரகரிசி பாயசம்
வரகரிசி தேங்காய் பாயசம்
வரகரிசி தேங்காய் பாயசம்
கோதுமை ரவா பாயசம்
கோதுமை ரவா பாயசம்
தினை பாயசம்
தினை பாயசம்
காரட் தினை பாயசம்
காரட் தினை பாயசம்
தினை பழ கஸ்டர்ட்
தினை பழ கஸ்டர்ட்
காரட் பாயசம்
காரட் பாயசம்




Monday, November 9, 2020

பச்சடி_வகைகள் - Salad / Raitha_Varieties

 பச்சடி வகைகள் : காரட், வெள்ளரிக்காய், வெங்காயம் போன்ற சில காய்கறிகளை பச்சையாகத் துருவி அல்லது மெல்லியதாக அரிந்து ஒன்றாக கலந்து தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பச்சடியாக செய்வது உண்டு.

அத்தகைய பச்சடி வகைகள் மற்றும் சில விசேஷமான பச்சடி வகைகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.


பச்சடி வகைகள்
வெந்தயபச்சடி
வெந்தயபச்சடி
வாழைப்பூவாழைத்தண்டுதயிர்பச்சடி
வாழைப்பூ வாழைத்தண்டு தயிர்பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
காரட் சாலட்
காரட் சாலட்
பப்பாளி அன்னாசி சாலட்
பப்பாளி அன்னாசி சாலட்
Fruit Salad - பழக்கலவை
பழக்கலவை - Fruit salad
தயிர் நெல்லிக்காய்
தயிர் நெல்லிக்காய்



பல வகையான சமையல் செய்முறைகள்