Search This Blog

Monday, August 20, 2018

Chaat-Vazhaithandu-Chaat

#வாழைத்தண்டுபொரிகலவை [ #வாழைத்தண்டுசாட் ] : #சாட் என்பது கேரட், வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி தழை மற்றும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாட் மசாலா பொடி போன்றவற்றுடன் பொரி சேர்த்து கலக்கி செய்யப்படும் ஒரு உணவு வகை. அதனை பொரி கலவை என்று தமிழில் கூறலாம். இங்கு அதனுடன் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி சேர்த்துள்ளேன். வாழைத்தண்டு நார் சத்து நிறைந்த உணவு. வாழைத்தண்டு கொண்டு பொதுவாக வாழைத்தண்டு பொரியல் மற்றும் தயிர் பச்சடி மட்டுமே செய்வது வழக்கம். இங்கு வாழைத்தண்டை உபயோகித்து சாட் செய்யும் முறையை காணலாம். 


Vazhaithandu chaat [ banana stem chaat ]


தேவையானவை :
1/2 கப்அரிசிப் பொரி 
1/2 கப்சோளப் பொரி 
1/3 கப்கேரட் சீவியது
1/2 கப்வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது
1தக்காளி, பொடியாக நறுக்கவும்
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1/4 கப்கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
தூள் & சாஸ் :
1/2 Tspகொத்தமல்லிதூள் 
1/2 Tspசீரகத்தூள்
2 சிட்டிகைமஞ்சத்தூள்
1/4 Tspமிளகாய்த்தூள்
1/4 Tspசாட் தூள்
1/4 Tspஉப்பு
1/2 Tspகருப்பு உப்பு [ ராக் சால்ட் ]
1/2 Tspஇனிப்பு & புளிப்பு புளி சாஸ்
1/4 Tspதேன்
மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் தூள்களை அவரவர் சுவைக்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்.

செய்முறை :
பொரி நீங்கலாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
பின்பு பொரி இரண்டையும் சேர்த்து கலக்கவும்.
உப்பு மற்றும் காரம் சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை தூவி சுவைக்கவும்.
கலந்தவுடன் சாப்பிட்டு விடவும். இல்லையெனில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகிவிடும்.

Vazhaithandu chaat [ banana stem chaat ]

குறிப்பு : மிளகாய்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை சேர்த்துக்கொள்ளலாம்.





சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

மோதகம் காரம்
மோதகம் காரம்
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ விரல்கள்
புளிக்கூழ்
புளிக்கூழ்
பகோடா
பகோடா
பஜ்ஜி
பஜ்ஜி


Friday, August 17, 2018

Inji Thokku

#இஞ்சிதொக்கு : #இஞ்சி நமது உணவின் சுவையை கூட்டுவதற்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது. பொங்கல் , &  உப்புமா போன்ற சிற்றுண்டிகளில் சிறிதளவேனும் இஞ்சி சேர்க்கும் போது அவற்றின் சுவை மிகுதியாவது திண்ணம். தேங்காய் சட்னி,  &  வெங்காய சட்னி போன்ற சட்னி வகைகளை அரைக்கும் போது சிறிதளவு இஞ்சியை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சேர்க்கும் போது சட்னி கூடுதல் சுவையுடன் இருப்பதைக் காணலாம்.
இஞ்சியை உபயோகித்து ஒரு சுவையான #தொக்கு செய்வதெப்படி என இங்கு காணலாம்.


inji thokku [ Ginger pickle ]

தேவையானவை :
150 gmsஇஞ்சி
8 - 10சிகப்பு மிளகாய் [ கூட்டி குறைக்கவும் ]
1/2 Tspவெந்தயம்
நெல்லி அளவுபுளி
1/2 Tspமஞ்சத்தூள்
15 - 20கருவேப்பிலை [ விருப்பப்பட்டால் ]
1 Tspவெல்லம் [ கூட்டி குறைக்கவும் ]
1 Tspகடுகு
2 Tspஉப்பு [ கூட்டி குறைக்கவும் ]
1/3 cupநல்லெண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காய் அளவு புளியை சூடான தண்ணீரில் ஊறவைக்கவும்.
இஞ்சியை மண் போக கழுவிய பின்னர் தோல் நீக்கி சிறு சிறு நீள வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியை மிதமான தீயில் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
அதில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து இடிக்கும் உரலில் இட்டு வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயை போட்டு நன்கு வறுக்கவும். வறுபட்ட மிளகாயை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
வறுத்த இஞ்சி துண்டுகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆறிய பின்னர் மிக்சியில் இட்டு அதனுடன் வறுத்த மிளகாய், உப்பு, வெல்லம் மற்றும் ஊறவைத்த புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
வாணலியை மீண்டும் அடுப்பில் ஏற்றி மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு வெடிக்க விடவும்.
அடுத்து கருவேப்பிலையை கிள்ளி சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
உப்பு சரி பார்க்கவும். தேவையெனில் சிறிது சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறவும். சிறிது நேரத்தில் நன்கு உருண்டு வரும்.
ஊற்றிய எண்ணெயும் வெளியில் கக்க ஆரம்பிக்கும்.
அந்த நேரத்தில் வறுத்த வெந்தயத்தை உரலில் இடித்து சேர்க்கவும்.
நன்கு ஒருமுறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
சூடு ஆறியதும் ஒரு பீங்கான் கிண்ணத்தில் அல்லது ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்கவும்.
உபயோகப்படுத்தும் போது சுத்தமான ஈரமில்லாத தேக்கரண்டி கொண்டு வேறொரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு சாதாரணமாக வெளியில் வைத்து பயன் படுத்தும் போது பத்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
இட்லி,  &  தோசை,  &  உப்புமா,   &  பொங்கல் போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் மிக அருமையாக இருக்கும்.


inji thokku [ Ginger pickle ]


குறிப்பு : மிளகாய், உப்பு மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் சுவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
ஆவக்காய் ஊறுகாய்
ஆவக்காய் 
ஊறுகாய்
உப்பு எலுமிச்சங்காய்
உப்பு 
எலுமிச்சங்காய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்

Sunday, July 9, 2017

Adai-Varieties

#அடை வகைகள் : தமிழ் மக்களுக்கு பிடித்தமான புரத சத்து நிறைந்த ஒரு பலகாரம்தான் அடை. புழுங்கரிசி [ இட்லி அரிசி ], பச்சரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஊறவைத்து அரைத்து எடுத்து வைக்க வேண்டும். அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அரைத்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தாராளமாக போட்டு கலக்கி சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுத்தால் அடை தயார். அடை தோசையைப்போல் மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக சுட்டெடுக்க வேண்டும்.

அடை சிறிது தடிமனாக பரப்பி சுடப்படுவதால் தோசையை விட வேக சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

தோசையைப்போல் அல்லாமல் சிறிது அதிகமாக அடையின் மீதும் சுற்றியும் எண்ணெய் விட்டு சுட்டெக்க வேண்டும்.

இதைத் தவிர மெல்லியதாக வெட்டிய சுரைக்காய், பரங்கிக்காய், சௌசௌ முதலியவற்றையும், முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகளையும் சேர்த்தும் அடை செய்யலாம்.
துரித கதியில் அடை செய்ய அரிசிமாவு, கடலை மாவு, பயத்தம் மாவு போன்ற இன்ன பிற உலர்ந்த மாவு வகைகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தண்ணீர் விட்டு கலக்கி மேற்சொன்ன காய்கறிகள் அல்லது கீரை கொண்டும் அடை செய்யலாம்.
அடையை கல்லிலிருந்து சூடாக எடுத்து தட்டில் இட்டு தாராளமாக நெய்யை அடையின் மீது பரப்பி அவியல் அல்லது தேங்காய் சட்னியுடன் சுவைத்தால் அற்புதமாக இருக்கும்.
அடையை சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
அடை வெல்லமும் சுவையான இணைகள்.
இது எதுவுமே இல்லாமல் அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

இங்கு அடை வகைகளின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இணைப்பை அழுத்தி பதிவை படித்து பின் செய்து சுவைத்து மகிழவும்.


அடை
அடை
சைவ ஆம்லெட்
சைவ ஆம்லெட்
அமராந்த் அடை
அமராந்த் அடை
கம்பு காலிப்ளவர் அடை
கம்பு காலிப்ளவர் அடை
கேழ்வரகு அடை
கேழ்வரகு அடை
பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ]
பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ]
சிறுபயறு பெசரட்டு
சிறுபயறு பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைப்பூ பசலை அடை
வாழைப்பழ இனிப்பு அடை
வாழைப்பழ இனிப்பு அடை
சௌசௌ அடை
சௌசௌ அடை






அடைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி வகைகள் மற்றும் சாம்பார் / குழம்பு வகைகள் ஆகியவற்றிற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

தொட்டுக்க