ஒன்று வெங்காயம் தக்காளியை மசாலா பொருட்களுடன் வதக்கிய பிறகு அரிசியை சேர்த்து அளவான தண்ணீர் விட்டு சமைப்பதாகும்.
மற்றொரு முறையில் சாதத்தை தனியே வடித்து முன்பே தயாரித்து வைத்துள்ள தக்காளி தொக்குடன் கலந்து செய்யப்படுவதாகும்.
தற்போது தக்காளி தொக்கு செய்யும் முறையை அறிந்துக் கொண்டோம்.
அதனால் இரண்டாவது முறைப்படி தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.
தேவையான பொருட்கள் :
1 கப் அரிசி
4 Tsp நல்லெண்ணெய்
1/2 Tsp மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட்]
1 1/2 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
4 Tsp குவித்து தக்காளி தொக்கு
செய்முறை :
குக்கரில் அரிசியை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு முறை கழுவிய பிறகு 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி அதிக தீயில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.
3 விசிலுக்குப் பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும்.
நல்லெண்ணையை சாதத்தின் மேல் பரவலாக ஊற்றி காற்றாடியின் கீழே ஆற வைக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சாரணியினால் சாதத்தை நசுக்காமல் கிளறி விடவும்.
சிறிது நேரத்தில் சூடு ஆறி உதிர் உதிராக சாதப் பருக்கைகள் பிரிந்துவிடும்.
- இப்போது தக்காளி தொக்கு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
- தேவையானால் இன்னும் சிறிது தக்காளி தொக்கு சேர்த்து கிளறவும்.
- நன்றாக சூடு ஆறிய பின் வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
தக்காளி சாதத்தை தங்களுக்கு விருப்பமான கார கறி அல்லது வத்தல் / அப்பளம் ஆகியவற்றுடன் சுவைக்கலாம்.
தொக்கு வெங்காயம் கொண்டு செய்திருப்பதால் நீண்ட நேரம் வைத்திருக்க இயலாது. ஆறு மணி நேரம் வரை நன்றாக இருக்கும்.
மதிய உணவிற்காக டப்பாவில் அடைப்பதாக இருந்தால் சூடு நன்றாக அடங்கிய பின்னரே எடுத்து வைக்க வேண்டும்.
சாதம் சேர்க்கப் படும் உப்பை உறிஞ்சிகொள்ளும். ஆதலால் செய்யும் போது உப்பை சிறிது தூக்கலாக இட வேண்டும். அவ்வாறு செய்வதால் சாப்பிடும் சமயத்தில் சரியாக இருக்கும்.