Search This Blog

Saturday, November 30, 2013

Garam Masaala Powder

#கரம்மசாலாபொடி :  பல வகையான கரம் மசாலா பொடிகள் கடைகளில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடனும் வெவ்வேறு  மணத்துடனும் இருக்கின்றன. அதனால் நாம் தயாரிக்கும் உணவு நாம் நினைத்த படி அல்லாமல் உபயோகப்படுத்தும் கரம் மசாலாவை பொருத்தே அமைகிறது. அதனால் நாமே வீட்டில் தயாரித்தால் நல்ல சுவையுடன் மிகுந்த மணமுடையாதாக இருக்கும். இந்த முறை நான் தயாரித்த கரம் மசாலா எப்படி என்று பார்ப்போம் .

கரம் மசாலா பொடி

தேவையான பொருட்கள் :
மல்லி விதை                      : 1/4 cup
சோம்பு                                   : 1 Tbsp
சீரகம்                                      : 1 Tbsp
மிளகு                                     : 2 Tbsp
ஏலக்காய்                              : 2 Tbsp
கிராம்பு                                  : 2 Tbsp
பட்டை பொடி                      : 1 Tbsp
இலவங்கப் பட்டை            : 3 குச்சிகள் 
ஜாதிக்காய்                           : 1/2
அன்னாசி மொக்கு              : 4
பிரிஞ்சி இலை                    : 4




 செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து சூடேற்றவும்.
முதலில் மல்லியை மிதமான தீயில் எண்ணெயில்லாமல் வறுக்கவும்.
சாரணியினால் கை விடாமல் கிளறி விடவும்.
நல்ல வாசனை வரும் வரை கருக விடாமல் வறுக்கவும்.
வறுபட்ட மல்லியை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்து சீரகம் மற்றும் சோம்பு இரண்டையும் சூடு வரும் வரை  வறுத்தால் போதும் . எடுத்து தட்டில் வைக்கவும்.


இப்போது மிளகை  சூடு ஏறும்  வரை வறுத்து எடுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அதே சூடான வாணலியில் மீதி பொருட்களை சூடு பண்ணவும்.
அனைத்தும் சூடு ஆறியதும் மிக்ஸ்யில் பொடியாக்கவும்.
சல்லடையால் சலித்து எடுக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

இப்போது நீங்கள் தயாரிக்கும் பிரியாணி, புலாவ் மற்றும் குருமா ஆகியவற்றின் வாசனை அருமையாக இருக்கும்.







மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மிளகுப் பொடி
மிளகுப்
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி





Banana Sweet Adai

#வாழைப்பழம்இனிப்புதோசை : #வாழைப்பழம் நன்கு கனிந்து விட்டால் சாப்பிட சிலருக்கு பிடிப்பதில்லை. எனக்கும் பிடிக்காது. அப்போதெல்லாம் இந்த அடையை செய்வது வழக்கம். வாழைப்பழத்தின் மணமும் சுவையும் வெல்லத்துடன் சேர்ந்து மிக நன்றாக இருக்கும். செய்வதும் மிக எளிது. எப்படி செய்வது என்று இப்போது காணலாம். கொடுக்கப்பட்டுள்ள அளவு 4 அ 5 அடைகள் செய்ய போதுமானது.



தேவையான பொருட்கள் :
வாழைப்பழம்                         : 1
கோதுமை மாவு                     : 1/2 கப்
அரிசி மாவு                               : 1 Tbsp
ரவா                                             : 1/4 கப்
வெல்லம்                                  : 1/3 கப் ( அட்ஜஸ்ட் )
ஏலக்காய் தூள்                       : 1/4 Tsp
உப்பு                                            : 1 சிட்டிகை
எண்ணெய் / நெய்                  : தேவையான அளவு

மாவு செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைப் பழத்தை துண்டுகளாக்கி போடவும்.


கையாலோ அல்லது மத்தாலோ நன்கு மசித்து விடவும்.


அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில்  வெல்லத்தை நசுக்கி போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும்.


கரண்டியினால் கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஆறியவுடன் வடிகட்டி வாழைப்பழத்துடன் சேர்க்கவும்.
மற்ற மாவையும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.


அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.

அடை ஊற்றும் முறை :
அடுப்பில் இரும்புக்கல்லோ ( அ ) ஒட்டாமல் வரும் கல்லோ வைத்து சூடாக்கவும்.
சூடான பின் கல்லில் எண்ணெய் தடவி மாவை பரப்பவும்.


அதன் மேலேயும் ஓரத்திலும் சொட்டு சொட்டாக எண்ணெய் விடவும்.
அடையின் ஓரம் இலேசாக சிவந்த பின் திருப்பி போட்டு வேக விடவும்.
பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.


இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
ம்ம்... ஆஹா! என்ன ருசி!!






முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் 

வாழைப்பூ பருப்பு உருண்டை
வாழைப்பூபசலைஅடை
பெசரட்டு
பெசரட்டு
அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை



Friday, November 29, 2013

More Kuzhambu

#மோர்க்குழம்பு : இந்த #குழம்பு தயிர் கொண்டு செய்யப்பட்டாலும் தயிர் குழம்பு என கூறப்படுவதில்லை. மோர்க்குழம்பு என்றே அழைக்கப்படுகிறது. #வெண்டைக்காய், கத்தரிக்காய், பூசணி, சுரைக்காய் , சேனை போன்ற சில காய்கறிகளே மோர் குழம்புக்கு ஏற்றவை ஆகும். புளித்த தயிரை விட புளிக்காத தயிரில் செய்யும் போதுதான் அருமையான  சுவையுடன் இருக்கும்.
இங்கு வெண்டைக்காயை கொண்டு எவ்வாறு மோர்க்குழம்பு செய்யலாம் என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
தயிர்                                           : 1 கப்
வெண்டைக்காய்                  : 7 ( அ ) 8
இஞ்சி துண்டு                         : 1/2 அங்குலம்
பெருங்காயம்                         : சிறு துண்டு
மஞ்சத்தூள்                             : 3 சிட்டிகை

 அரைக்க தேவையான பொருட்கள் :


தேங்காய் துருவல்                : 3 Tsp
சீரகம்                                           : 1 Tsp
மல்லி                                          : 1/2 Tsp
மிளகு                                           : 6 ( அ ) 7
பச்சை மிளகாய்                       : 1
சிகப்பு மிளகாய்                        : 1
கடலை பருப்பு                          : 1 Tsp
பச்சரிசி                                         : 1/2 Tsp
பூண்டு பற்கள்                            : 2
சின்ன வெங்காயம்                 : 5 ( அ ) 6
கடலை பருப்பு, பச்சரிசி, மல்லியை அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

தாளிக்க :
கடுகு                                              : 1/2 Tsp
சீரகம்                                             : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                       : 1 Tsp
பெருங்காயம்                             : சிறு துண்டு
கருவேப்பிலை                           : 10
எண்ணெய்                                    : 1 Tsp

செய்முறை :
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியினால் அடித்துக் கலக்கி பெருங்காயம் மற்றும்  இஞ்சியை இடித்து சேர்க்கவும். தனியே வைக்கவும்.
மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைக்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு வெண்டைக்காயை துண்டுகளாக்கி சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை மஞ்சத்தூள், காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.


காய் வேகும் வரை வாணலியை ஒரு தட்டினால் மூடவும்.


வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
கரண்டியால் கலக்கி விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை சிறியதாக்கி ஒரு கொத்தி வரும் வரை கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஓரிரண்டு மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கிள்ளி போடவும்.


வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பின் சீரகம், சிகப்பு மிளகாய் துண்டுகள்,உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை தாளித்து மோர் குழம்பின் மேல் ஊற்றவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.


சூடான சாதத்தில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து பிடித்தமான கறியுடன் சாப்பிட்டால் ம்ம்ம்....... சுவையே தனிதான்!!...






மேலும் சில சுவையான குழம்பு வகைகள் :

பூசணிக்காய் மோர்க்குழம்பு
பூசணிக்காய் 
மோர்க்குழம்பு

morekuzhambu
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு
கடப்பா
கடப்பா - இட்லிக்கு தொட்டுக்க
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு







Thursday, November 28, 2013

Masaal Dosai

#மசால்தோசை :  ஹோட்டலுக்கு போனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி உண்ணுவது மசால் தோசையே!! நான்  நினைக்கிறேன் இந்த ஒரு உணவு ஹோட்டலில் இருந்து வீட்டுக்கு வந்தது என்று. முறுவலாக தோசை ஊற்றி வெந்ததும் நடுவே உருளை கிழங்கு மசாலாவை வைத்து மூடி பரிமாறப்படுகிறது. தோசை மாவை முதல் நாளே அரைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த உணவை தயார் செய்ய முடியும். இங்கே முதலில் உருளை கிழங்கு மசாலா செய்வது என்று பார்ப்போம். அதன் பின் தோசை தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

மசால் தோசை

தேவையான பொருட்கள் :
தோசைக்கு :
தோசை மாவு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.

உருளை கிழங்கு மசாலாவிற்கு :
உருளை கிழங்கு                                    : 2
வெங்காயம் நடுத்தரம்                         : 1
பச்சை மிளகாய்                                      : 2 ( அட்ஜஸ்ட் )
கருவேப்பிலை                                       : 8
கொத்தமல்லி தழை நறுக்கியது     : 1 Tbsp ( அதிகமாகவும் இருக்கலாம் )
காரட் வெட்டியது                                   : 1 Tbsp ( வேண்டுமானால் )
குடை மிளகாய்  நறுக்கியது              : 1 Tbsp ( வேண்டுமானால் )


பச்சை பட்டாணி                                     : 1 Tbsp ( கிடைத்தால் )
பசலை கீரை ( Spinach )                            : 6 ( விருப்பப்பட்டால் )

சேர்க்க வேண்டிய பொடிகள் :
மஞ்சள் தூள்                                             : 1/4 Tsp
சீரகத் தூள்                                                 : 1/4 Tsp
பெருங்காயத் தூள்                                 : 2 சிட்டிகை

தாளிக்க :
கடுகு                                                           : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                                    : 1 Tsp
எண்ணெய்                                                : 2 Tsp
மசாலா செய்முறை :
உருளை கிழங்கை மண் போக சுத்தமாக கழுவி நான்கு துண்டுகளாக்கவும்.
குக்கரில் உப்புடன் 3 விசில் வரும் வரை அதிக தீயிலும், பின் தீயை குறைத்து 5 நிமிடங்களும் வேக வைத்து ஆவி அடங்கியதும் வெளியே எடுக்கவும்.
தோலை உரித்து தனியாக வைக்கவும்.

வேகவைத்த உருளை கிழங்கு

மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
இப்போது பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயைசேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்து வெங்காயத்தை சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு மீதமுள்ள வெட்டிய காரட், குடை மிளகாய்  மற்றும் பட்டாணியை  சேர்த்து வதக்கவும்.
மஞ்சத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.


உரித்து வைத்துள்ள உருளை கிழங்கை கையினால் ஒன்றிரண்டு துண்டுகளாக்கி சேர்க்கவும்.


ஒரு பிரட்டு பிரட்டி தேவையான உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
ஏழெட்டு நிமிடங்களுக்கு சிறிய தீயில் கொதிக்க விடவும்.


தண்ணீர் முழுவதுமாக வற்றக் கூடாது.
இந்த நிலையில் விருப்பப் பட்டால் பசலை கீரையை பொடியாக அறிந்து சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையை தூவவும்.

உருளை கிழங்கு மசாலா

தோசை சுடும் முறை :
அடுப்பில் மிதமான தீயில் தோசை கல்லை வைத்து சின்ன சுத்தமான துணியினால் எண்ணெய் தடவவும்.
தோசை மாவை கல்லின்  நடுவில் வைத்து கரண்டியின் அடி பாகத்தினால் தேய்த்து வட்டமாக தோசை ஊற்றவும்.
தோசையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு மூடியினால் மூடி சுமார் 1 1/2 நிமிடம் வேகவிடவும்.

ஓரம் சிவந்ததும் நடுவில் தயாரித்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து தோசையை இரண்டாக மடிக்கவும்.

மசால் தோசை

ஆஹ்! சுவையான மசால் தோசை தயார்.

மசால் தோசை




மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :

தோசை மாவு
தோசை மாவு
தோசை
தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
பொடி தோசை
பொடி தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை


தொட்டுக்க சட்னி வகைகள்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Wednesday, November 27, 2013

Coriander Soup

#கொத்தமல்லிசூப் : சென்ற வாரம் ஒரு இரவு விருந்திற்கு சென்றிருந்தேன். அப்போது உணவுக்கு முன் ஒரு சூப் பரிமாறினார்கள். மிகவும் நல்ல  வாசனையுடன் இருந்தது. கொத்தமல்லி  வாசனை என உடனே புரிந்தது.
கூடவே பூண்டின் மணமும் தூக்கலாக இருந்தது. மறு நாள் வீட்டில் முயற்சி செய்தேன். நன்றாக வந்தது. ஆனால் விருந்தில் அருந்தியது இன்னும் நன்றாக இருந்தது.
இங்கு எப்படி இந்த சூப்பை செய்தேன் என பார்க்கலாம். நான் அருந்திய சுவை கிடைக்கும் வரை மறுபடியும் முயற்சி செய்வேன். சரியாக வந்ததும் எப்படி செய்வது என்பதை பிறகு பார்ப்போம்.

கொத்தமல்லி சூப்

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி பொடியாக நறுக்கியது   : 3 Tbsp
பூண்டு  பற்கள்                                          : 6 ( பொடியாக நறுக்கவும் )
வெங்காயம் அறிந்தது                             : 1 Tsp
தண்ணீர்                                                          : 1 கப்
ஓட்ஸ்                                                          : 1 Tsp குவித்து
எண்ணெய் ( அ ) வெண்ணெய்               : 1/4 Tsp

அலங்கரிக்க :

மிளகுத்தூள்                             : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )

செய்முறை :
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி சிறிய தீயில் சுட வைக்கவும்.
இன்னொரு அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய் ( அ ) வெண்ணெய்  சூடாக்கி முதலில் பூண்டை நன்றாக வதக்கி, பிறகு வெங்காயத்தை  லேசாக வதக்கி  சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.
கொத்தமல்லி மற்றும் ஓட்ஸ் சேர்த்து கலக்கவும்.
கரண்டியால் கஞ்சி பதம் வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.
தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து சூப் கிண்ணத்தில் ஊற்றி மேலே மிளகுதூள் தூவி பரிமாறவும்.
இந்த நறுமணம் மிக்க கொத்தமல்லி சூப் மாலை வேலையில் அருந்த மிகவும் நன்றாக இருக்கும்.
மைக்ரோவேவ் செய்த மிளகு அப்பளத்துடன் சுவைத்தால் அருமையோ  அருமை!! ம்ம்... இன்னொரு முறை கேட்பீர்கள்!!

மற்ற சூப் வகைகள் முயற்சி செய்து பார்க்க :
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்