Search This Blog

Tuesday, April 29, 2014

Amaranth Adai

#அமராந்த்அடை :  அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இங்கு அமராந்த் மாவை உபயோகித்து ஒரு ருசியான அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     அமராந்த் மாவு
1/2 கப்                                     கோதுமை மாவு
1/4 கப்                                     பயத்தம் மாவு
2 Tsp                                        அரிசி மாவு
1/2 Tsp                                     உப்பு
1/4 கப்                                    வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 கப்                                       பாலக் கீரை பொடியாக நறுக்கியது
2 Tsp                                       கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
5 அ 6                                     கருவேப்பிலை
எண்ணெய் அடை சுட தேவையான அளவு.

செய்முறை :
மாவு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு இட்லி மாவு போல கெட்டியாக கலக்கி வைக்கவும்.
மாவுடன் வெங்காயம் மற்றும் கீரைகளை சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் விட்டு, பின்னர் இரண்டு கரண்டி மாவை தோசை கல்லின் நடுவே வைத்து பரப்பவும்.
ஒரே தடிமனாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.


ஊற்றிய அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.
அடையின் ஓரம் சிவக்க ஆரம்பித்தவுடன் திருப்பி போடவும்.


இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.


இஞ்சி சட்னியுடன் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.












மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள்
முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


Cauliflower Tomato Kuruma

#காலிப்ளவர்தக்காளிகுருமா : மிக எளிதாக செய்யகூடிய குருமா. எண்ணெயே சேர்க்காமல் செய்ய கூடியது.
மதிய உணவுக்காக சப்பாத்தி அல்லது பூரியுடன் டப்பாவில் அடைத்து எடுத்து செல்ல ஏதுவான ஒரு குருமாவாகும். காலையில் மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்து விடலாம்.
இப்போது எப்படி என காணலாம்.

காலிப்ளவர் தக்காளி குருமா

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                            காலிப்ளோவர் துண்டுகள்
1/4 கப்                                            காரட் துண்டுகள்
1/4 Tsp                                            உப்பு

மசாலாவிற்கு :
1 சிறிய அளவு                           வெங்காயம்
3 அ 4 பற்கள்                               பூண்டு
1/2 Tsp                                             கசகசா
1 Tsp                                                சீரகம்
1/4 Tsp                                             மல்லி
2                                                      முந்திரி பருப்பு
3 Tsp                                               தேங்காய் துருவல்
1 அ 2                                              பச்சை மிளகாய்
1                                                      தக்காளி
3/4 Tsp                                             உப்பு [ அட்ஜஸ்ட் ]

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க.

செய்முறை :
காரட் மற்றும் காலிப்ளோவர் இரண்டையும் குக்கரில் எடுத்துகொள்ளவும்.
அரை கப் தண்ணீர் விட்டு 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு உடனே ஆவியை வெளியேற்றி விடவும்.

மிக்ஸியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மைய அரைத்துக்கொள்ளவும்.


அரைத்த விழுதை வேக வைத்த காயுடன் சேர்க்கவும்.
காலிப்ளவர் தக்காளி குருமா

ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கொத்தமல்லி தூவி கலக்கி விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

காலிப்ளவர் தக்காளி குருமா

சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையான குருமா.


அதே போல பூரியுடனும் நன்றாக இருக்கும்.

மற்ற சில சிறப்பான சமையல் குறிப்புகள் 

அவியல் கடப்பா குடைமிளகாய் குருமா

Monday, April 28, 2014

Pulikachal - Tamarind Rice Mix

#புளிகாச்சல் : புளிகாச்சல் என்றதுமே சிலருக்கு நாவில் நீர் ஊரும். இதனை செய்து வைத்துக்கொண்டால் #புளியோதரை செய்வதற்கும் #இடியாப்பம் செய்யும் போது அதனுடன் சேர்த்து பிசைவதற்கும் ஏதுவாக இருக்கும்.
#மதியஉணவு எடுத்து செல்பவர்களுக்கு மிக மிக அவசியமான ஒன்றாகும்.
புளிகாச்சலை சாதத்துடன் கலந்து உருளை கிழங்கு கார கறியுடன் அல்லது வத்தல் [அ ]அப்பளத்துடன் சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.
இனி புளிகாச்சல் செய்முறையை காண்போம்.

புளிகாச்சல்

தேவையான பொருட்கள் :
3 பெரிய நெல்லி அளவு                புளி
8                                                              சிகப்பு மிளகாய், துண்டுகளாக்கவும்
சிறிய துண்டு                                    பெருங்காயம்
1 1/2 Tsp                                                  கடுகு
1/2 Tsp                                                    வெந்தயம்
1 Tsp                                                        உளுத்தம் பருப்பு
3 Tsp                                                        கடலை பருப்பு
1/4 கப்                                                    நில கடலை
15 - 20                                                     கறுவேப்பிலை
4 Tbsp                                                      நல்லெண்ணெய்  


தேவையான பொடிகள் :
1 Tsp                                                    மிளகாய் பொடி
1/2 Tsp                                                 மஞ்சத்தூள்
2 Tsp                                                    மல்லித்தூள்
1/2 Tsp                                                 சீரகத்தூள்
1/4 Tsp                                                 பெருங்காய தூள்

செய்முறை :
புளியை வெந்நீரில் அரை மணி நேரம் முன்னதாகவே ஊற வைக்கவும்.
ஊறிய புளியை சிறிது தண்ணீர் விட்டு பிழிந்து கெட்டியான கரைசலை எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

சிகப்பு மிளகாய் துண்டுகளில் பாதியை சேர்க்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கடலையை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் கடைசியாக கருவேப்பிலையை சேர்த்து வறுத்து ஒரு கிண்ணத்தில் தனியே எடுத்து வைக்கவும்.


அதே வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை சேர்த்து சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
வெடித்ததும் வெந்தயம் மற்றும்  மீதமுள்ள மிளகாய் துண்டுகள், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
அடுத்து மிளகாய் தூளை சேர்த்து உடனேயே புளி கரைசலை சேர்க்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொடிகளையும் சேர்க்கவும்.
சிறிய தீயில் கொதிக்கவிடவும்.


சில நிமிடங்கள் கழித்து மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும்.

இப்போது வறுத்து தனியே வைத்துள்ள பருப்பு, உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கலக்கி விடவும்.

புளிகாச்சல்

மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
எண்ணெய் நன்கு மேலெழும்பி மேலே வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அல்லது கண்ணாடி பாட்டிலிலும் எடுத்து வைக்கலாம்.
நன்கு ஆறிய பிறகு மூடி வைக்கவும்.

புளிகாச்சல்

நன்கு எண்ணெய் விட்டு கிளறி இருப்பதால் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு வெளியிலேயே வைத்திருக்கலாம்.
குளிர் சாதன பெட்டியிலும் பத்திர படுத்தலாம்.

சுவையான கார சாரமான புளி காச்சல் தயார்.
சாதத்தில் கலந்து புளியோதரை தயாரிக்கலாம்.
இடியாப்பம் செய்தால் அதனுடனும் கலந்து சுவைக்கலாம்.

குறிப்பு :
புளிகாச்சல் பழைய புளியில் செய்யும் போதுதான் நன்றாக இருக்கும்.
புளியின் சுவைக்கேற்றவாறு மிளகாய் தூள் மற்று உப்பை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.

Sunday, April 27, 2014

Idly

#இட்லி : இட்லி மாவு தயாரிக்க தேவையான பொருட்களின் அளவை பார்த்தோம். எவ்வாறு அரைத்து எடுத்து வைப்பது என்றும் பார்த்தோம். இப்போது இட்லி மாவிலிருந்து இட்லி எப்படி ஆவியில் வேகவைத்து எடுப்பது என்று பார்ப்போம். இட்லி செய்வதற்கு இட்லி பானை அல்லது குக்கர் தேவை.
இட்லி பானையில் வைத்து இட்லி செய்வதற்கு குழியுடன் கூடிய தட்டுகள் இருக்கும். ஒவ்வொரு குழியிலும் துளைகள்  இடப் பட்டிருக்கும். அவ்வாறு உள்ள தட்டின் மேல் துணி விரித்து இட்லி ஊற்றி வேக விட வேண்டும்.

குழிகளில் ஓட்டை இல்லாவிடின் எண்ணெய் தடவியும்  இட்லி மாவை ஊற்றி எடுக்கலாம் அல்லது துணியை பரப்பியும் இட்லியை வேக வைக்கலாம்.

குக்கரில் வைப்பதெற்கென்று தனியாக தட்டுகள் இருக்கும். குக்கரில் இட்லி வேக வைக்கும் போது மூடியில் வெயிட் பொருத்தக் கூடாது.

செய்முறை :
முதலில் துணி போட்டு இட்லி எவ்வாறு வேக வைத்து எடுப்பது என பார்ப்போம்.
இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.


இட்லி தட்டின்  மேல் ஈரமான துணியை விரிக்கவும்.


இட்லி மாவினால் ஒவ்வொரு குழியையும் நிரப்பவும்.


இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டை இட்லி பானையினுள் வைத்து மூடியால் மூடவும்.


சரியாக பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.
வெந்து விட்டதா என கத்தியையோ அல்லது தேக்கரண்டியின் பின் பாகத்தையோ இட்லியினுள் சொருகி பார்க்கவும்.
மாவு ஒட்டிக்கொண்டு வந்தால் மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.


வெந்துவிட்டதென்றால் இட்லி தட்டை போன்ற அளவுள்ள தட்டின் மேல் அப்படியே தலை திருப்பி கவிழ்க்கவும்.


இட்லி தட்டை மெதுவாக எடுத்து விடவும்.
இட்லி துணியுடன் ஒட்டிகொண்டிருக்கும்.

இட்லி

துணியின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து மெதுவாக இட்லியிலிருந்து துணியை பிரித்தெடுக்கவும்.

இட்லியை சூடாக வைத்திருக்க உதவும் பாத்திரத்தில் எடுத்து அடுக்கவும்.

மறுபடியும் இட்லி தட்டின் மேல் துணியை பரப்பி அடுத்த ஈட்டிற்கு மாவு நிரப்பி மறுபடியும் ஆவியில் வேக விடவும்.
ஒவ்வொரு ஈடு வேக வைத்து எடுக்கும் போதும் இட்லி பானையில் உள்ள தண்ணீர் குறைந்திருந்தால் சிறிது சேர்க்கவும்.

ஓட்டைகள் இல்லாத இட்லி தட்டில் இட்லி ஊற்றி எடுப்பது எப்படி என பார்ப்போம்.

இட்லி தட்டின் குழிகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடவும்.



எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.



இப்போது குழிகளில் மாவை நிரப்பவும்


இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.



ஆவியில் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குழிகளிலிருந்து இட்லி ஒட்டிக்கொள்ளாமல் எடுக்க ஒவ்வொரு இட்லியின் ஓரத்தை சுற்றி நீர் விட்டு பிறகு தேக்கரண்டியால் எடுக்கவும். தேக்கரண்டியை அடிக்கடி தண்ணீரால் ஈரப்படுத்திக்கொள்ளவும்.

இட்லி


சூடான இட்லியை குழிவான தட்டில் வைத்து இட்லியின் மேலே தக்காளி சாம்பார் அல்லது சாம்பார் ஊற்றி ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு ருசிக்கவும்.

இட்லி தக்காளி சாம்பார்

இட்லியை தேங்காய் சட்னி யுடன் சுவைக்கவும்.

இட்லியுடன் காரமான சிகப்பு மிளகாய் சட்னி அல்லது பச்சை மிளகாய் சட்னி அல்லது பூண்டு மிளகாய் சட்னி யுடன் சுவைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

இட்லி மிளகாய் பொடி யுடன் சாப்பிட்டால் அதன் ருசியும் மணமும் தனிதான்.

குறிப்பு :

இட்லி பானையினுள் அல்லது குக்கரினுள்  இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒன்றன் மேல் ஒன்றாக தட்டுக்களில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கலாம்.
அவ்வாறு செய்யும் போது மேலே உள்ள தட்டிலிருந்து தண்ணீர் கீழே உள்ள தட்டின் இட்லியின் மேல் விழுந்து இட்லியை நச நசவென ஆகி விடும்.
அதை தடுக்க இட்லி தட்டில் மாவு நிரப்பிய பிறகு மாவின் மேலும் ஒரு ஈரமான துணியை விரித்து உள்ளே வைக்க வேண்டும். அப்போதுதான் மேல் தட்டிலிருந்து விழும் தண்ணீரை இந்த துணி உறிஞ்சிக்கொள்ளும்.

Lunch Box : 
 
இட்லி மதிய உணவிற்காக அல்லது பயணத்தின் போது  எடுத்து செல்ல ஏற்ற உணவாகும்.
இட்லியின் மேல் நல்லெண்ணெய் தடவி சூடு ஆறிய பிறகு எடுத்து டிபன் டப்பாவில் அடைக்க வேண்டும்.
தொட்டுக்கொள்ள சட்னி அல்லது சாம்பாரை தனியாக வேறொரு டப்பாவில் எடுத்து செல்வது நல்லதாகும்.

இட்லியின் மேல் இட்லி மிளகாய் பொடியை நல்லெண்ணையுடன் சேர்த்து  தடவி  ஆற விட்டு எடுத்து அடுக்கினாலும் அருமையாக இருக்கும்.

 இட்லியை நல்லெண்ணெய் தடவி வாழை இலையில் வைத்து பொட்டலம் மடித்து எடுத்து செல்வதற்காக கட்டினால் இன்னும் அருமையான மணத்துடன் இருக்கும். 





மற்ற இட்லி வகைகள்

சோள இட்லி
சோள இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
கோதுமை ரவா இட்லி
கோதுமைரவா இட்லி
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Lunch Box

 இங்கு மதிய உணவிற்காக அல்லது நெடுந்தூர பயணங்களின் போது தயாரித்து எடுத்துச் செல்லக்கூடிய உணவு வகைகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.


டிபன் வகைகள் : இட்லி
இட்லி
இட்லி
பொடி இட்லி
பொடி இட்லி
காஞ்சிபுரம் இட்லி
காஞ்சிபுரம் இட்லி
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
ரவா பாப்பரை இட்லி
ரவா பாப்பரை இட்லி
கோதுமை ரவா இட்லி
கோதுமை ரவா இட்லி
குறிப்பு :
டப்பாவில் எடுத்து வைப்பதற்கு முன் இட்லியின் மேல் மற்றும் அடி பக்கத்தில் நல்லெண்ணெய் தடவி ஆற வைப்பது அவசியம்.
தொட்டுக்கொள்ள எடுத்து செல்லும் சட்னியில் தேங்காய் சேர்த்திருந்தால் மிக குறுகிய நேரமே நன்றாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வீணாகி விடும் அபாயம் உண்டு.
ரவா இட்லி போன்ற சிற்றுண்டிகளில் வெங்காயம் தவிர்ப்பது நல்லது.


டிபன் வகைகள் : தோசை
மசால் தோசை
மசால் தோசை
பொடி தோசை
பொடி தோசை
சப்பாத்தி/பூரி வகைகள்
சிகப்புமுளைகீரை சப்பாத்தி
சிகப்புமுளைகீரை சப்பாத்தி
பாப்பரை சப்பாத்தி
பாப்பரை சப்பாத்தி
பாலக் சப்பாத்தி
பாலக் சப்பாத்தி
பூரி
பூரி
கொடிபசலைகீரை பூரி
கொடிபசலைகீரை பூரி

கலந்த சாதம் வகைகள்
கறுவேப்பிலை சாதம்
கறுவேப்பிலை சாதம்
எலுமிச்சை சாதம்
எலுமிச்சை சாதம்
தக்காளி சாதம்
தக்காளி சாதம்
வரகரிசி புளியோதரை
வரகரிசி புளியோதரை
வாங்கி பாத் [கத்தரிக்காய் சாதம் ]
வாங்கி பாத் [கத்தரிக்காய் சாதம் ]
தயிர் சாதம்
தயிர் சாதம்



சுவையான #மதியஉணவு தயாரிக்க தேவையான


 #பொடிகள்/#கலவைகள்/#தொக்குகள் :


கலவைகள்/தொக்குகள்
புளிகாச்சல்
புளிகாச்சல்
தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு
பொடிகள்/கலவைகள்
இட்லி மிளகாய்பொடி
இட்லி மிளகாய்பொடி
இட்லி மிளகாய்பொடி ஆளிவிதையுடன்
இட்லி மிளகாய்பொடி ஆளிவிதையுடன்